பழைய இட ஒதுக்கீடை கொண்டு வாங்க மோடிஜி!! நிறைவேத்தி கொடுக்குறோம்! பிரியங்கா காந்தி சுளீர்!
மோடி அரசு ஏற்கெனவே நிறைவேற்றிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள், நிறைவேற்றித் தருகிறோம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மோடி அரசுக்கு சவால் விட்டுள்ளார். ஏற்கெனவே அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட பழைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக கொண்டு வாருங்கள், நாங்கள் ஆதரவு கொடுத்து நிறைவேற்றித் தருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய மூன்றும் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று முழுவதும் இவை குறித்து விவாதம் நடைபெற்றது. ஆனால் எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாததால் மூன்று மசோதாக்களும் தோல்வியடைந்தன. இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டாடி வருகின்றன.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, “மோடி அரசு ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பழைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரும் திங்கள்கிழமை கொண்டு வரட்டும். அப்போது யார் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பதை மக்கள் பார்த்துவிடலாம். நாங்கள் அனைவரும் அந்த மசோதாவுக்கு ஆதரவு கொடுத்து வாக்களிப்போம்” என்றார்.
இதையும் படிங்க: ராகுல்காந்தி -பிரியங்கா காந்தி மோதல்?! அசாமில் குழப்பம்! கட்சி தாவும் தலைவர்களால் காங்கிரசார் அதிருப்தி!
அவர் மேலும் கூறுகையில், “இந்திய அரசியலமைப்பைப் பாதுகாத்ததை நாங்கள் கொண்டாடினோம். தொகுதி மறுவரையறை மூலம் அவர்கள் செய்த சதியை நாங்கள் முறியடித்தோம். பழைய மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையே மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாகவே இருப்போம். ஆனால் இந்த முறை அவர்கள் கொண்டு வந்த விதம் காரணமாக நாங்கள் ஆதரவு தரவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், மோடி அரசு அதை புதிய வடிவில் கொண்டு வந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது பிரியங்கா காந்தியின் இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் திங்கள்கிழமை மோடி அரசு பழைய மசோதாவை கொண்டு வருகிறதா அல்லது புதிய மசோதாவை மீண்டும் முயற்சிக்கிறதா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். பெண்கள் உரிமை குறித்த விவாதம் தேசிய அளவில் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: #DMKBackstabsWomen!! புதிய ட்ரெண்டிங் ஹேஸ்டேக்! திமுக கூட்டணிக்கு எதிராக தேஜ கூட்டணி கைவரிசை!