முதல்வர் விஜய் உடன் பேராசியர் கலையரசன் சந்திப்பு! கைது சர்ச்சைக்கு வச்சாச்சு முற்றுப்புள்ளி!
பேராசிரியர் கலையரசனின் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஎம் செயலர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
முதல்வர் ஜோசப் விஜய்யை பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார். சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் சென்னை வளர்ச்சி மையத்தின் (MIDS) பேராசிரியரான கலையரசனை புதன்கிழமை அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ. காமாட்சி குறித்து அவதூறான கருத்தைப் பதிவிட்டதற்காக கைது செய்யப்படுவதாகக் காவல்துறையினர் விளக்கம் அளித்த நிலையில், அந்தக் கணக்கு தன்னுடையது இல்லை என்று கலையரசன் விளக்கம் அளித்தார். இதன்பின்னர் நேற்று காலை 8 மணியளவில் கலையரசனை அவரது வீட்டில் காவல்துறையினர் இறக்கிவிட்டனர்.
இதுதொடர்பாக டிஜிபிக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ள கலையரசன், தனக்குத் தொடர்பில்லாத வழக்கில் அதிகாலையில் சீருடையில் இல்லாத காவலர்கள் தன்னைக் கைது செய்து துன்புறுத்தியதாகவும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனுக்கும் வச்சாச்சு செக்!! ஆதவ் அர்ஜூனா குறித்த அவதூறு பேச்சு! முன்ஜாமீன் கோரி மனு!
பேராசிரியர் கலையரசனின் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஎம் செயலர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல் குமார், பேராசிரியர் கலையரசனின் கைது நடவடிக்கை முழுக்க முழுக்க காவல்துறையின் தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்குப் பேராசிரியர் கலையரசனை நேரில் வரவழைத்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் உடனிருந்தார்.
இதையும் படிங்க: இது உலகமகா கண்டுப்பிடிப்பு! நோபல் பரிசே கொடுக்கலாம்! அமைச்சர் ராஜீவ் பேச்சுக்கு செல்லூர் ராஜு விமர்சனம்!