×
 

பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

கடந்த 2022-ல் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது காலணி எரியப்பட்ட விவகாரத்தில் ஜெயகர்ணா என்வர்  மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து மதுரை கிளை உத்தரவு.

மதுரையைச் சேர்ந்த ஜெயகர்ணா உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், "கடந்த 2022 ஆகஸ்ட் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மதுரை விமான நிலையத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வந்திருந்தார். அவர் மீது திடீரென காலணி எறியப்பட்ட நிலையில், என் மீது உட்பட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தவறான நோக்கத்துடன் என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆகவே என்மீது பதியப்பட்ட வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி விக்டோரியாக கௌரி முன்பாக விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், "மனுதாரர் ஒரு தொழிலதிபர். அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமே விமான நிலையம் சென்றார். சம்பவம் 11:30 மணிக்கு நடந்த நிலையில், 12:30 மணிக்குதான் மனுதாரர் விமான நிலையம் வந்தார். சிசிடிவி காட்சிகளும் அவர் அஞ்சலி செலுத்திய உடன் சென்றுவிட்டதை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே மனுதாரர் மீது தவறாக  அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நினைத்ததை செய்ய முடியல..! பரப்புரையில் PTR பழனிவேல் தியாகராஜன் வருத்தம்..!!

அதையடுத்து நீதிபதி, "சம்பவம் 11.30 க்கு நடந்த நிலையில் மனுதாரர் 12.30க்கு தான் சம்பவ இடத்திற்கு வந்தார் என்பது வழக்கின் அடிப்படையே சிதைக்கிறது. அவருக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டு எதுவும் குறிப்பிடப்படவில்லை. பொதுவான குற்றச்சாட்டுகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. விசாரணையிம் முரண்பாடுகள் உள்ளன. ஆகவே,  இந்த வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை.

இந்நிலையில் வழக்கைத் தொடர்வது மனுதாரருக்கு தேவையற்ற இடையூறையே ஏற்படுத்தும். குற்றவியல் சட்டத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க இயலாது என குறிப்பிட்டு மனுதாரருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை ரத்து செய்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: PTR-க்கு டெல்லியில் கூட ரசிகர்கள்...! சம்மந்தமே இல்லாத வேட்பாளர் அவரு... சுந்தர் சி-யை விமர்சித்த கனிமொழி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share