×
 

விஜய் உடன் நல்ல நட்பு உள்ளது! அவருக்கு உறுதுணையாக இருப்போம்! அமித்ஷாவிடம் ரங்கசாமி வாதம்!! பாஜக அப்செட்!

நடிகர் விஜய்க்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. எனவே, எனது கட்சி அவருக்கு உறுதுணையாக இருக்கும் என ரங்கசாமி ஒரே போடாக போட்டுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி திடீரென போட்ட அதிரடி அறிவிப்பு தமிழக-புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் உடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நேற்று பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முதல்வர் ரங்கசாமியை சந்தித்தபோது, இந்த அதிரடி அறிவிப்பு வெளியானது. ரங்கசாமி கூறியதாவது: “நடிகர் விஜய்க்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. எதுவாக இருந்தாலும் என்னை கலந்து ஆலோசிப்பார். அவருக்கு இது முதல் தேர்தல். எனவே எனது கட்சி அவருக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் தமிழகத்தில் தவெகவுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளேன்.”

புதுச்சேரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) தொடரும் என்றும், காரைக்காலில் அமித் ஷாவை சந்தித்தபோது 16 சீட்டுகள் என்ஆர்காங்கிரஸுக்கு, மீதமுள்ளவை பாஜக கூட்டணி கட்சிகளுக்கு என்று முடிவானதாகவும் ரங்கசாமி உறுதிப்படுத்தினார். ஆனால் தமிழகத்தில் தவெக உடன் கூட்டணி என்ற அறிவிப்பு பாஜகவை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: த.வெ.க. புதுச்சேரியில் போட்டியிடுமா? விசில் சின்னம் கிடையாதா? விஜய் ப்ளானில் புது ட்விஸ்ட்!

இதைக்கேட்ட நிர்மல் குமார் சுரானா, “தமிழக கூட்டணி விவகாரத்தில் அவசரப்பட வேண்டாம். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். தவெகவை என்டிஏ-வில் கொண்டு வர முயற்சி செய்யலாம். நான் டெல்லி சென்று மேலிடத்துடன் ஆலோசித்து வருகிறேன்” என்று கூறிவிட்டு அவசரமாக வெளியேறினார்.

முன்னதாக காரைக்காலில் அமித் ஷாவை சந்தித்தபோதும், மொபைல் உரையாடலின்போதும் ரங்கசாமி இதே கருத்தை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவுடன் நல்ல உறவு இருந்தது. அவர் மறைந்த பிறகு எல்லாம் தலைகீழானது. இப்போது விஜய்க்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறேன்” என்று அமித் ஷாவிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பால் பாஜக உயர் தலைமை கடும் அதிர்ச்சியடைந்துள்ளது. அமித் ஷா உடனடியாக நிர்மல் குமாரை ரங்கசாமியை சமாதானப்படுத்த சொல்லியுள்ளார். தமிழகத்தில் தவெக உடன் கூட்டணி என்றால் புதுச்சேரியில் என்டிஏ தொடரும் என்ற ரங்கசாமியின் இரட்டை நிலைப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இது பெரிய அரசியல் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரங்கசாமியின் இந்த முடிவு என்ஆர்காங்கிரஸ்-பாஜக உறவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

இதையும் படிங்க: விஜய் உடன் கைகோர்த்த ரங்கசாமி! தவெக உடன் கூட்டணி! என்.ஆர்.காங்கிரஸ் முடிவால் பாஜக அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share