ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவிற்கு தடை... எடப்பாடி பழனிசாமிக்கு புகழேந்தி கொடுத்த புது தலைவலி!
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணயத்தில் புகழேந்தி மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.
அதிமுக விவகாரத்தில் தேர்தல் ஆணயத்தில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தல் நடைபெறவிருக்கும் சமயத்தில் அதிமுகவின் சார்பாக எந்த ஒரு வேட்பாளரையும் அனுமதிக்க கூடாது எனவும், அதேபோல விண்ணப்ப படிவம் ஏ மற்றும் பி ஆகியவற்றில் எடப்பாடி பழனிசாமி பொது செயலாளர் என்ற முறையில் கையெழுத்திடக்கூடாது என்ற ஒரு கோரிக்கையை வலியுறுத்தி புகழேந்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மாநிலங்களவை தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என்றும் அதிமுக பொது செயலாளர் என்ற அடிப்படையில் விண்ணப்ப படிவத்தில் யாரும் கையழுத்திட அனுமதிக்க கூடாது ஆகிய கோரிக்கையுடன் சூரியமூர்த்தி சார்பாகவும் இரண்டு மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: இபிஎஸ்க்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை... முதல்வர் ஸ்டாலின் காட்டம்
மாநிலங்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இரட்டை சின்னத்தில் இருக்கும் வழக்குகளை சுட்டிக்காட்டி இந்த இரண்டு மனுக்களுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தினுடைய முடிவுகள் எட்டப்படாமல் அதிமுக விவகாரத்தில் எந்த ஒரு அனுமதியும் வழங்க கூடாது என்ற ஒரு கோரிக்கையை தான் இந்த மனுக்களில் மனுதாரர்கள் சூரியமூர்த்தி மற்றும் புகழேந்தியாக இரண்டு பேருமே முன்வைத்துள்ளார்கள்.
இதையும் படிங்க: 3 கார்களில் போய் அமித் ஷாவை சந்தித்தது ஏன் தெரியுமா? மௌனம் கலைத்த எடப்பாடி பழனிசாமி!!