பஞ்சாப்பில் 3 இடங்களுக்கு புனித நகர அந்தஸ்து!! மது, இறைச்சி விற்பனைக்கு தடை! அரசு கறார்!
சீக்கிய மத குரு தேக் பகதுாரின் 350வது தியாக தினத்தை நினைவுகூறும் வகையில் பஞ்சாப் சட்டசபையில் சிறப்பு கூட்டம் நடந்தது.
பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய மதத்தினரால் புனிதமாக போற்றப்படும் மூன்று முக்கிய இடங்களுக்கு ‘புனித நகர’ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்தப் பகுதிகளில் இறைச்சி, மது, புகையிலை பொருட்கள் விற்பனைக்கும் பயன்பாட்டுக்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீக்கிய மத குரு தேக் பகதூரின் 350-வது தியாக தினத்தை நினைவுகூரும் வகையில் பஞ்சாப் சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப், பதிண்டா மாவட்டத்தில் உள்ள தல்வண்டி சாபோ, அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள கலியாரா பகுதி ஆகிய மூன்று இடங்களுக்கு புனித நகர அந்தஸ்து வழங்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சீக்கிய மதத்தில் மிக முக்கியமான ஐந்து தக்துகளில் (புனித இடங்கள்) மூன்று இடங்கள் பஞ்சாப்பில் உள்ளன. இவற்றின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், சீக்கியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவும் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: தவெக கிறிஸ்துமஸ் விழா கோலாகல தொடக்கம்... முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய்...!
மாநில முதல்வர் பகவந்த் மான் சிங் கூறுகையில், இந்த மூன்று புனிதப் பகுதிகளிலும் இறைச்சி, மது, புகையிலை பொருட்களை விற்பனை செய்யவோ பயன்படுத்தவோ கூடாது என்று தெரிவித்தார். இந்தத் தடை உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
சீக்கியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களான இந்த இடங்கள் புனித நகர அந்தஸ்து பெற்றதற்கு சீக்கிய சமூகமும், சீக்கிய அமைப்புகளும் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை சீக்கிய மதத்தின் மரபுகளையும் புனிதத்தையும் பாதுகாக்கும் என்று அவர்கள் பாராட்டியுள்ளனர்.
பஞ்சாப் அரசின் இந்த முடிவு மாநிலத்தில் சீக்கிய மதத்தினரின் உணர்வுகளை மதிக்கும் செயலாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சினிமா பாணியில் போராட்டக்காரர்களை திசை திருப்பிய போலீஸ்... பரபரப்பான சூழலில் சிக்கந்தர் தர்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...!