×
 

தவெக விஜயை கொஞ்சம் ஓரங்கட்டுங்க!! திமுகவிடம் டீல் பேசுங்க! காங்கிரசில் ஐவர் குழு அமைப்பு!

தமிழக சட்டசபை தேர்தலைக் கருதி, திமுக உடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸ் குழு அமைத்துள்ளது. இதை வரவேற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், 'அரசல் புரசலான செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும்' என்று தெரிவித்துள்ளார்.

2026 தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்துவிட்டது. திமுகவுடன் கூட்டணி தொடர்வது உறுதி என்று காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட சிறப்புக் குழுவை நியமித்துள்ளது. 

இந்தக் குழுவில் கிரிஷ் ஜோடங்கர், செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் அல்வா, ராஜேஷ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அறிவிப்பு, சமீப காலமாக பரவி வந்த “காங்கிரஸ் – தவெக கூட்டணி” பேச்சுக்கு தீர்க்கமான முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் ரகசியப் பேச்சு நடத்துவதாகவும், திமுக கூட்டணியை விட்டு விலக வாய்ப்பு இருப்பதாகவும் பல்வேறு செய்திகள் பரவின. இதன்னும் சிலர், ராகுல் காந்தி நேரடியாக விஜய்யைச் சந்திக்க உத்தரவிட்டதாகவும் கூறினர். இந்த “அரசல் புரசல்” செய்திகள் திமுக-காங்கிரஸ் உறவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 'சத்தம் பத்தாது விசில்போடு' விசில் சின்னம் கேட்கும் தவெக!! ஆட்டோவும் ஆப்சன்ல இருக்கு!

இந்நிலையில், காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பும், 5 பேர் குழு அமைப்பும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதை முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் மனமுவந்து வரவேற்றுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஐந்து உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை இது மீண்டும் உறுதி செய்கிறது. அவ்வப்போது வெளியாகும் அரசல் புரசலான செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக தரப்பிலும் இந்த அறிவிப்புக்கு உடனடி வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக மூத்த தலைவர்களில் ஒருவர், “காங்கிரஸ் தலைமை தெளிவாக இருப்பதால், தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்கும். இண்டியா கூட்டணி தமிழகத்தில் மிக வலுவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

விஜய்யின் தவெக இதுவரை எந்தக் கட்சியுடனும் உறுதியான கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் திமுகவுடன் தொடர முடிவு செய்திருப்பது, தவெகவுக்கு சிறிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், திமுக-காங்கிரஸ் கூட்டணி மேலும் வலுப்பெறும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்துக்கு பாடை... போராட்டத்தில் குதித்த புதுவை காங்கிரஸ் கட்சியினர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share