×
 

பீஹாரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்..! நிதீஷ் குமாருக்கு அவ்வளவு பயமா? உசுப்பேற்றிய ராகுல்..!

மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக பீகார் சென்ற ராகுல் காந்தியை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகாரில் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக பீகார் சென்ற ராகுல்காந்தியை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்துவதால் பரபரப்பு ஏற்பட்டது.

கார் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி நடந்தே விடுதிக்குச் செல்ல முயன்றார். அப்போது காங்கிரசாரை காவல்துறையினர் தடுக்க முயன்ற போது இரு தரப்புக்குள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ராமர் குறித்த சர்ச்சை பேச்சு... ராகுலுக்கு வந்த புதிய சிக்கல்!!

இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, மாணவர்களுடனான உரையாடல் என்பது ஒரு குற்றமா என்று கேள்வி எழுப்பினார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதற்காக அச்சப்படுகிறார் என்றும் சமூகநீதியை புதைக்க முயற்சியா என்றும் ராகுல் காந்தி கேள்வியை முன் வைத்துள்ளார். 

இதையும் படிங்க: சீனக்காரனின் பொம்மை டிரோனை பெருமை பேசிய ராகுல்.. இவரா தலைவர்..? சரிந்தது இமேஜ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share