×
 

துரோகி வர்றார் பாருங்க! தேசத்தின் எதிரி!! மத்திய அமைச்சரை வம்பிழுத்த ராகுல் காந்தி; வெடிக்கும் சர்ச்சை!

ரவ்நீத் சிங் பிட்டு கை குலுக்க மறுத்துவிட்டு, ராகுல் காந்தியை பார்த்து தேசத்தின் எதிரி என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

நாடாளுமன்றத்தில் 8 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, அந்த வழியாக வந்த ரயில்வே மற்றும் உணவு துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, எதிர்க்கட்சி எம்பிக்களை பார்த்து “ஏதோ கார்கில் போரை வென்று விட்டு வந்தது போல இருக்கிறது” என்று கூறியபடி சென்றார்.

இதை கேட்ட ராகுல் காந்தி உடனடியாக எதிர்வினையாற்றினார். “இதோ ஒரு துரோகி வருகிறார். அவர் முகத்தை பாருங்கள்” என்று சக எம்பிக்களிடம் கூற, அவர்கள் ஆமோதித்து ஆரவாரம் செய்தனர். பின்னர், ரவ்னீத் சிங் பிட்டுவை நோக்கி ராகுல் “ஹலோ பிரதர், என்னுடைய துரோகி நண்பா, கவலைப்பட வேண்டாம், நீங்கள் சீக்கிரம் காங்கிரஸுக்கு திரும்பி வந்துவிடுவீர்கள்” என்று கூறி கை குலுக்க கை நீட்டினார்.

ஆனால் ரவ்னீத் சிங் பிட்டு கை குலுக்க மறுத்துவிட்டு, ராகுலை நோக்கி “தேசத்தின் எதிரி” (desh ke dushman) என்று கடுமையாக பதிலளித்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் வீடியோவாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 8 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் விவகாரம்! பார்லி-யில் அமளி!! மக்களவை ஒத்திவைப்பு! எம்.பிக்கள் போராட்டம்!

பின்னர் பேசிய ரவ்னீத் சிங் பிட்டு, “ராகுல் என்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார். பாராளுமன்ற உள்ளேயும் அப்படித்தான் நடந்தார். தனிப்பட்ட கோபத்தால் இப்படி செய்கிறார்” என்று குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தவர் ரவ்னீத் சிங் பிட்டு. அவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, காங்கிரஸ் தலைமையகம் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “கொலை செய்யப்பட்ட பியாந்த் சிங்கின் பேரனை துரோகி என்று ராகுல் கூறியது கண்டிக்கத்தக்கது. தியாகம் செய்த குடும்பத்தை இழிவுபடுத்தியுள்ளார்” என்று கடுமையாக விமர்சித்தார். பாஜக தரப்பில், இது சீக்கிய சமூகத்தை முழுமையாக புண்படுத்தியுள்ளது என்று கூறி ராகுல் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த வார்த்தைப் போர் பஞ்சாப் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் கிண்டல் மற்றும் ரவ்னீத் சிங் பிட்டுவின் கடுமையான பதில் ஆகியவை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது காங்கிரஸ்-பாஜக இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..! மத்திய அரசுக்கு அவ்வளவு பயமா? முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share