மக்களை சீரழிக்கும் இரட்டை இன்ஜின் ஆட்சி!! இது வளர்ச்சிக்கானதே அல்ல!! பாஜக மீது ராகுல் விமர்சனம்!
பாஜக இரட்டை இன்ஜின் அரசின் ஆட்சி வளர்ச்சிக்கானது அல்ல, அழிவுக்கானது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசு வளர்ச்சிக்கானது அல்ல, அழிவுக்கானது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊழல் நிறைந்த இந்த ஆட்சி ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை சீரழித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், "பாஜகவின் இரட்டை இன்ஜின் அரசுகள் ஊழல் நிறைந்தவை. இவை மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றன. ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற விஷயங்கள் பாஜகவின் உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை பரவியுள்ளன.
இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? யாருடன் கூட்டணி? டெல்லியில் 2 நாள் ராகுல்காந்தி மீட்டிங்! நிர்வாகிகளுக்கு அழைப்பு!
இவர்களின் ஆட்சியில் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் வாழ்க்கை வெறும் புள்ளிவிபரங்களாக மட்டுமே கருதப்படுகின்றன" என்று கூறியுள்ளார்.
மேலும், "வளர்ச்சி என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் தான் இந்த ஆட்சியை நடத்தி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் இரட்டை இன்ஜின் அரசு கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சாதகமானது.
சாதாரண இந்திய குடிமகனைப் பொறுத்தவரை இது வளர்ச்சிக்கான ஆட்சி அல்ல, அழிவின் வேகம். தினமும் யாரோ ஒருவரின் வாழ்க்கையை நசுக்குவதை இது வழக்கமாகக் கொண்டுள்ளது" என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இந்த விமர்சனத்தை வலுப்படுத்தும் வகையில், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, டெல்லி போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்த சில சம்பவங்களை குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநிலங்களில் ஏழைகளின் உரிமைகள் பறிக்கப்படுவது, ஊழல் அதிகரிப்பது போன்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டிய அவர், பாஜகவின் ஆட்சி மக்களுக்கு எதிரானது என்று வலியுறுத்தியுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த அறிக்கை காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், பாஜக தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் வரும் நாட்களில் மேலும் விவாதங்களை தூண்டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இது பாஜகவின் இரட்டை இன்ஜின் ஆட்சி என்ற ஸ்லோகனுக்கு எதிரான தொடர்ச்சியான விமர்சனமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: வார்த்தைகளில் வெடித்த ஜோதிமணி! டெல்லி தலைமையின் விருப்பமும் அதுதான்! பற்றவைக்கும் வேலுச்சாமி!