×
 

முட்டாள்கள்!! பார்லி.,-யில் பொரிந்து தள்ளிய ராகுல் காந்தி!! பாஜக எம்.பிக்கள் ஆவேசம்! அனல் பறந்த விவாதம்!

பார்லியில் பேசுகையில், முட்டாள்கள் என்ற வார்த்தையை பயன்படுத்திய எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு எம்.பி.,க்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

லோக்சபாவில் மாணவர்கள் போராட்டம் குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துகள், நாடாளுமன்றத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. அவர் பயன்படுத்திய சில வார்த்தைகளுக்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி, நாட்டின் கல்வி முறையில் உள்ள குறைபாடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்தார். கல்விக்காக மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், கல்வி அமைப்பில் ஏற்படும் குளறுபடிகள் காரணமாக இளைஞர்கள் அதிருப்தி அடைவதாக அவர் கூறினார்.

மாணவர்கள் நடத்தும் போராட்டங்கள் கோபத்தின் வெளிப்பாடு அல்ல என்றும், அவர்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே இருப்பதாகவும் ராகுல் தெரிவித்தார். அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துகளை கேட்காமல் தங்களை உயர்வாக நினைத்துக் கொள்பவர்கள் என்றும், விமர்சனங்களை ஏற்காதவர்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: மிஷன் 2029-க்கு விஜய் ரொம்ப முக்கியம்!! திமுகவை மொத்தமாக முடித்துக் கட்ட தயாராகும் ராகுல் காந்தி! அடுத்த அரசியல் மூவ்!

அப்போது அவர் பயன்படுத்திய ‘முட்டாள்கள்’ என்ற வார்த்தைக்கு பாஜக எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தனது பேச்சை சில நிமிடங்கள் நிறுத்திய ராகுல் காந்தி, யாருடைய பெயரையும் குறிப்பிட்டு அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும், விதிமீறல் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் தொடர்பான விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார். குறிப்பிட்ட வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, மாணவர்கள் மீதான நடவடிக்கைகள் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிரண் ரிஜிஜூ, ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், அதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து பாஜக எம்.பிக்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என முழக்கமிட்டனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, அமைதியாக இருந்து விவாதத்தில் கவனம் செலுத்துமாறு சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி - விஜய் சந்திப்பு உறுதி?! I.N.D.I.A கூட்டணியில் இணைகிறது தவெக? புதிய அரசியல் கணக்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share