×
 

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி!! கூடலூரில் நிகழ்ச்சி! கூட்டணி குறித்தும் ஆலோசனை!!

நீலகிரி மாவட்டம் கூடலுாருக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நாளை மறுதினம் வருகிறார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள புனித தாமஸ் உயர்நிலைப் பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி வரும் ஜனவரி 13-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

ராகுல் காந்தி அன்றைய தினம் காலையில் டெல்லியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கூடலூர்-மைசூர் சாலையில் உள்ள மார்தோமா நகர் பகுதி மைதானத்திற்கு வருகை தருகிறார். அங்கிருந்து கார் மூலமாக பள்ளிக்கு சென்று பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். விழா முடிந்ததும் அவர் கேரள மாநிலம் திருச்சூர் நோக்கி புறப்பட உள்ளார்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: வார்த்தைகளில் வெடித்த ஜோதிமணி! டெல்லி தலைமையின் விருப்பமும் அதுதான்! பற்றவைக்கும் வேலுச்சாமி!

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸுக்கு அதிக நன்மை கிடைக்கும் என்பது குறித்து விரிவான புள்ளிவிவரங்கள், கடந்த தேர்தல் முடிவுகள், வாக்கு வங்கி பகுப்பாய்வு ஆகியவற்றை தயார் செய்து வைத்துள்ளனர். இந்த தரவுகளை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்து, அவரது ஆலோசனையைப் பெற திட்டமிட்டுள்ளனர்.

கூடலூர் பகுதியில் ராகுல் காந்தி வருகை தருவது தொடர்பாக ஏற்கனவே பள்ளி நிர்வாகமும், காங்கிரஸ் கட்சியினரும் தீவிர ஏற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு தமிழக அரசியலில் வரும் நாட்களில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: திமுக நிலைமை அதோகதி! தவெக போனா தப்பிச்சிக்கலாம்! ராகுல்காந்தி காதுகளுக்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share