எழுந்த பாலியல் புகார்.. பதவியை ராஜினாமா செய்தார் MLA ராகுல் மம்கூடத்தில்..!!
பாலியல் புகாரைத்தொடர்ந்து, கேரள காங்கிரஸ் இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் எம்.எல்.ஏ ராகுல் மம்கூடத்தில்.
பாலக்காடு எம்.எல்.ஏ. மற்றும் கேரள காங்கிரஸ் இளைஞரணி மாநிலத் தலைவரான ராகுல் மம்கூடத்தில், பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை அடுத்து தனது இளைஞரணி தலைவர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மலையாள நடிகை ரினி அன் ஜார்ஜ் மற்றும் எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் ஆகியோரால் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ரினி, ஒரு இளம் அரசியல் தலைவர் தனக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியதாகவும், ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் குற்றம் சாட்டினார். அவர் யாரையும் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், பாஜக மற்றும் சிபிஐ(எம்)-இன் இளைஞரணியான டிஒய்எஃப்ஐ ஆகியவை ராகுலை குறிவைத்து போராட்டம் நடத்தின. பின்னர், ஹனி பாஸ்கரன், ராகுல் தனக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியதாகவும், அவற்றை தவறாக சித்தரித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: தவெகவிற்கு வந்த சிக்கல்.. கடைசி நேரத்தில் காலைவாரிய ஒப்பந்ததாரர்கள்.. ஓடோடி வந்த சேட்டன்கள்..!!
ராகுல், ஆதூரில் உள்ள தனது இல்லத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், கட்சியின் நலன் கருதி ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தார். "என்மீது எந்த முறையான புகாரும் இல்லை. ரினி என் நண்பர், அவர் என்னை குறிப்பிடவில்லை என்று நம்புகிறேன்," என்று அவர் கூறினார். மேலும், ஹனியின் குற்றச்சாட்டுகளை மறுத்து, அவர் முழு உரையாடலை வெளியிடவில்லை என்று வாதிட்டார்.
காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், குற்றச்சாட்டுகள் தீவிரமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். கட்சியின் தேசிய தலைமை மற்றும் கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளன.
ராகுலின் ராஜினாமாவை அடுத்து, முன்னாள் இளைஞரணி தலைவர் கே.எம். அபிஜித் தற்காலிக தலைவராக நியமிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, கட்சியின் பிம்பத்தை பாதுகாக்க ராகுலை பதவி நீக்க வேண்டும் என்று உள்கட்சி அழுத்தங்கள் தீவிரமடைந்தன.
இதையும் படிங்க: பாலியல் புகார்! கேரள நடிகையால் நேர்ந்த கொடூரம்.. சென்னைக்கு அழைத்து வரும் போலீஸ்..!