×
 

முதல்வர் பதவி விவகாரம்! கொஞ்சம் பொறுங்க DK!! சிவக்குமாருக்கு ராகுல்காந்தி சொன்ன சீக்ரெட்!

'முதல்வர் பதவி விவகாரத்தில் பொறுமையாக இருங்கள்; உங்களை அழைக்கிறேன்' என, கர்நாடக துணை முதல்வர் சிவகுமாருக்கு, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல், 'மெசேஜ்' அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியின் 2.5 ஆண்டு காலம் முடிந்ததும் முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடையேயான போர் உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிவகுமாருக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ் “பொறுமையாக இருங்கள், நான் அழைக்கிறேன்” என்று இருப்பதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 இதனால், நான்கு நாட்களாக முகம் வாடிய சிவகுமார் நேற்று திடீரென உற்சாகமாகத் தெரிந்தார். டிசம்பர் 1 அன்று பாராளுமன்ற அமர்வு தொடங்கும் முன், காங்கிரஸ் 'ஹை கமாண்ட்' – சோனியா, ராகுல், கார்கே ஆகியோர் இன்றே (நவம்பர் 27) முடிவெடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி 2023-ல் அமைந்தபோது, சிவகுமாருக்கு 2.5 ஆண்டுகள் முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று சித்தராமையா வாக்குறுத்தியதாகக் கூறப்படுகிறது.  நவம்பர் 20 அன்று அந்தக் காலம் முடிந்ததும், சிவகுமார் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை டில்லி அனுப்பி, மேலிடத்தில் அழுத்தம் கொடுத்தார். இதை உணர்ந்த சித்தராமையா, கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை பெங்களூருவில் சந்தித்து, “இரண்டு பேரும் முதல்வர் பதவிக்கு முரண்டு பிடிக்கிறார்கள்” என்று புகார் கொடுத்தார். 

இதையும் படிங்க: சித்தராமய்யா முதல்வர் பதவிக்கு சிக்கல்! போர்க்கொடி தூக்கும் சிவக்குமார்! கர்நாடகாவில் கலகக்குரல்!!

 கார்கே, ராகுலுடன் 20 நிமிடங்கள் போன் செய்த பிறகு, சிவகுமாருக்கு ராகுலின் மெசேஜை அனுப்பியதாகவும், “DK, we will meet soon” என்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையே, சிவகுமார் நேற்று முன்தினம் இரவு பெங்களூரு ஹோட்டலில் சித்தராமையாவின் ஆதரவாளியான பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியை சந்தித்து, “நான் முதல்வராக ஆதரவு கொடுங்கள். மாநில காங்கிரஸ் தலைவர் பதவி உங்களுக்கு வாங்கித் தருகிறேன். தேவையானால் துணை முதல்வராகவும் நியமிக்கிறேன்” என்று 'டீல்' பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஆனால், ஜார்கிஹோளி நேற்று பேட்டியில், “சிவகுமாருக்கு முதல்வர் ஆசை முன்பே இருந்தது. தற்போது தலைமை மாற்றம் குறித்து எந்த விவாதமும் இல்லை. சித்தராமையாவின் வழிகாட்டுதல் தேவை” என்று தெளிவுபடுத்தினார். 

காங்கிரஸ் தலைவர் கார்கே டில்லியில் நேற்று கூறுகையில், “கர்நாடகாவில் முதல்வர் பதவி குழப்பம் குறித்து நான், சோனியா, ராகுல் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி தீர்ப்போம். தேவைப்பட்டால் மருந்து கொடுப்போம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 

சிவகுமார் நேற்று சமூக வலைதளத்தில் “மாற்று வலிமை உலக வலிமை” என்று கிரிப்டிக் போஸ்ட் போட்டு, “வாக்குறுதி காப்பது மிகப்பெரிய சக்தி” என்று சித்தராமையாவுக்கு மறைமுகமாக சாட்டல் விட்டார். 
இந்தப் போர் 2026 தேர்தலுக்கு முன் காங்கிரஸை பலவீனப்படுத்துமா? ராகுல் அழைத்தால் சிவகுமார் முதல்வர் ஆவாரா? டில்லி 'ஹை கமாண்ட்' முடிவு என்ன? கர்நாடக அரசியல் வட்டாரங்கள் இப்போது அதைத்தான் கண்காணிக்கின்றன. 

இதையும் படிங்க: உச்சக்கட்டத்தில் மோதல்! காங்., பொறுப்பில் இருந்து விலகும் சிவக்குமார்!! கர்நாடக அரசியலில் பரபரப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share