×
 

காலையிலேயே பரபரப்பு.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் சோதனை நடைபெற்று வருகின்றது.

கடலூரில் ஆதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் 2016-21 சட்டமன்ற உறுப்பினராக சத்யா பன்னீர்செல்வம் இருந்து வந்தார். இவர் தற்போது அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை செயலாளராக செயல்பட்டு வருகிறார் கடந்த தேர்தலில் இவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது இவர் பண்ருட்டியில் முன்னாள் நகர மன்ற தலைவரான இவரது கணவர் பன்னீர் செல்வத்துடன் வசித்து வருகிறார்.

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யா பன்னீர்செல்வம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் சத்யா பன்னீர்செல்வம் பண்ருட்டி வீட்டில் தற்போது கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் 2011-2016 வரை பண்ருட்டி நகர மன்ற தலைவராக இருந்த போது ஊழல் புரிந்ததாக கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். தற்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் மீது புதிய வழக்கு பதிந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share