×
 

கனமழை எதிரொலி... சனீஸ்வரன் கோவில் கருவறைக்குள் புகுந்த மழைநீர்... பக்தர்கள் கடும் அவதி...!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சனீஸ்வரன் கோவில் கருவறைக்குள் மழை நீர் புகுந்தது.

தமிழ்நாட்டின் அழகிய பசுமை நிலங்களால் சூழப்பட்ட தேனி மாவட்டம், அதன் இயற்கை அழகும், ஆன்மீக பெருமையும் கொண்டு பிரபலமானது. இந்த மாவட்டத்தின் உத்தமபாளையம் வட்டத்தில், சின்னமனூர் அருகே அமைந்துள்ள குச்சனூர் கிராமம், ஒரு தனித்துவமான ஆன்மீக மையமாகத் திகழ்கிறது. இங்கு, நவகிரகங்களில் ஈஸ்வர் பட்டம் பெற்ற சனீஸ்வர பகவான் தனியாக சுயம்பு வடிவில் அருள்புரிந்து வரும் அருள்மிகு சுயம்பு சனீஸ்வரர் திருக்கோயில், பக்தர்களின் அன்பையும், நம்பிக்கையையும் ஈர்க்கும் ஒரு புனித இடமாகும்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் சனீஸ்வரருக்கு தனி கோயில் அமைந்துள்ள இடம் இதுவே என்பது இதன் சிறப்பு. இக்கோவில், சனி தோஷங்களை நீக்கி, வாழ்க்கையில் நீதியையும், வளமையையும் அளிக்கும் தலமாகப் புகழ்பெற்றுள்ளது.

இதனிடையே, வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதன் காரணமாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆரஞ்சு அலர்ட்! அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... !

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக குன்னூர் சனீஸ்வரன் கோவிலில் மழை நீர் புகுந்தது. கோவில் கருவறைக்குள் மழை நீர் புகுந்ததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மோட்டார் வைத்து கோவில் கருவறைக்குள் உள்ள மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். கனமழையின் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல் டூ கன்னியாகுமரி வரை.. தமிழகத்தில் இங்கெல்லாம் சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share