மாம்பழ சின்னத்துக்கு போட்டா போட்டி..!! ராமதாஸ் வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்..!!
மாம்பழ சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பா.ம.க.வின் உள் கட்சி பிளவு தொடர்பான சர்ச்சைகள் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் வாசலில் முடிவுக்கு வந்துள்ளன. கட்சியின் நிறுவனரும் மூத்த தலைவருமான டாக்டர் எஸ். ராமதாஸ், தனது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தரப்புக்கு எதிராக பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். குறிப்பாக, கட்சியின் சின்னமான மாம்பழத்தை முடக்க வேண்டும் என்று கோரி அவர் தாக்கல் செய்த மனு சமீபத்தில் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது ராமதாஸ் தரப்புக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தின் பின்னணியைப் பார்த்தால், பா.ம.க.வில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக கட்சி இரு அணிகளாகப் பிரிந்தது. ராமதாஸ் தரப்பு, அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும், தேர்தல் ஆணையத்துக்கு அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்றும் குற்றம்சாட்டி வந்தது.
இதனால், தேர்தல் ஆணையம் ஜூலை 30, 2025 அன்று அன்புமணி முகவரிக்கு அனுப்பிய மாம்பழ சின்ன ஒதுக்கீட்டு கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், சின்னத்தை தற்காலிகமாக முடக்க வேண்டும் என்றும் ராமதாஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும், தனது தலைமையிலான நிர்வாகிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் இடம்பெற்றிருந்தது.இரு தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் விரிவாக விசாரிக்கப்பட்டன. ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர்கள், கட்சியின் உள் விதிகளின்படி தாங்களே சரியான தலைமை என்றும், சின்னத்தை அன்புமணி தரப்பு பயன்படுத்தினால் அது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.
இதையும் படிங்க: ரொம்ப விசில் அடிக்காதீங்க..! தொண்டர்களை ஜாலியாக கலாய்த்த அன்புமணி..!
மறுபக்கம், தேர்தல் ஆணையம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. கட்சி உள் தகராறுகளை தீர்த்துக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பல்ல என்றும், இது உரிமையியல் நீதிமன்றத்தில் தீர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அவர்கள் கூறினர்.
உள்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக் கொள்ளக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்க கூறிய மனமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இரு வழக்குகளும் விசாரணைக்கு உகந்ததல்ல என குறிச்சனை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் தோல்வி பயத்தில் தான் ரூ.5,000 வரவு..!! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி ராமதாஸ்..!!