×
 

மீண்டும் பாஜகவுடன் கூட்டணி?... சூசகமாக சொன்ன ராமதாஸ்...!

அன்புமணி, செளமியா அன்புமணி கட்டாயத்தின் பேரிலேயே கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகவும் தெரிவித்திருந்தார். 

வன்னியர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் பாமக தங்களது கூட்டணிக்குள் இணைத்தே ஆக வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக உள்ளார். அவர் உத்தரவின் பேரில் தான் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து ஆடிட்டர் குரு மூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ராமதாஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாமகவில் அப்பா மற்றும் மகன் இடையிலான சண்டை உச்சத்தை எட்டிய போது செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், தான் அதிமுக கூட்டணிக்கு செல்ல விரும்பியதாகவும், ஆனால் அன்புமணி, செளமியா அன்புமணி கட்டாயத்தின் பேரிலேயே கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி அமைத்ததாகவும் தெரிவித்திருந்தார். 

ராமதாஸின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த முறை பாஜக - பாமக இடையே கூட்டணி அமையுமா? என்ற கேள்வியும் எழுந்தது. இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமையுமா? என்பது குறித்து சூசமாக பதிலளித்துள்ளார். 

இதையும் படிங்க: பாமக தலைவரா முகுந்தன் ? நல்ல செய்தி என சூசகமாக சொன்ன ராமதாஸ்...பரபர அரசியல்!

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸிடம், தொடர்ந்து உங்களுக்கும் உங்க மகன்களுக்கும் இருக்கக்கூடிய பிரச்சனை சரி செய்யப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், சரி செய்யப்படும், சரி செய்தால்தான் தேர்தலை சந்திக்க முடியும் என்றார். மதுரை வந்த அமித் ஷா தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெரும் எனக்கூறியுள்ளார், அதனை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதிலளித்த ராமதாஸ், தமிழ்நாட்டில் பாஜக அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித் ஷா கூறியது சரியே எனக்கூறியுள்ளார். தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடறதுக்கு வாய்ப்பு இருக்கா? என்ற கேள்விக்கு அதெல்லாம் எனக்கு சொல்ல தெரியாது. அமித் ஷா சொன்னது சரி என தெரிவித்துள்ளார். எப்போது நல்ல செய்தி வரும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விரைவில் வந்துவிடும். வரும் வியாழக்கிழமை நல்ல செய்தி வரும் என்றார். 
 

இதையும் படிங்க: ராமதாசுடன் முகுந்தன் திடீர் சந்திப்பு.. கட்சி பூசல் குறித்து ஆலோசனை?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share