உதயமாகிறதா "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி"?... புதிய கட்சி தொடங்க ராமதாஸ் திட்டம்...!
சமூக வலைத்தளங்களில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களின் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக ராமதாஸ் தரப்பு தனி கட்சி தொடங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாக இருக்கிறது.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வருகின்றது. வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை அணுகுவதில் ராமதாஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போதுநீதிமன்றம் தேர்தல் ஆணையம் ஆகியவை இரண்டுமே அன்புமணியை பாமகவின் தலைவராக அங்கீகரித்திருக்கிறது.அதே நேரத்தில் ராமதாஸ் தொடர்ந்து தேர்தல் ஆணயத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்.
அதேபோல நீதிமன்றத்திலும் இது சம்பந்தமான சட்ட போராட்டத்தை நடத்துவோம் என்று அவரது தரப்பை சார்ந்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த வழக்கு எனக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வர சில மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமதாஸுக்கு வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லாமல் போகக் கூடும் என கூறப்படுகிறது என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராமதாஸை ஏமாற்றி பெட்டி, பெட்டியாய் சுருட்டிய அன்புமணி... அருள் எம்.எல்.ஏ. திடுக்கிடும் குற்றச்சாட்டு...!
ஒருவேளை தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியும், மாம்பழம் சின்னமும் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை அணுகுவதற்கு வசதியாக ஒரு புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இது சம்பந்தமான பணிகள் சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் சட்டமன்ற உறுப்பினரான சேலம் அருளின் ஏற்பாட்டின் பெயரில் "அய்யா பாட்டாளி மக்கள் கட்சி" அதாவது ஏபிஎம் கே என்ற பெயரிலே ஒரு புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டுருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்றது.
பொதுவாக ஒரு கட்சியை தொடங்க வேண்டுமானால் 100 பேரிடமிருந்து அபிடவிட் வாங்கி அதில் அவர்களுடைய கையொப்பம் பெற்று தேர்தல் ஆணயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது இந்த நபர் கட்சியை ஆரம்பிக்கலாம். இவரை நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லி ஒரு 100 பேர் கையொப்பமிட்டு கொடுக்க வேண்டும். அப்படி அந்த 100 பேர் கையொப்பமிட்டு கொடுத்த அந்த பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துதான் ஒரு கட்சியை தொடங்க முடியும்.
அதே நேரத்தில் ராமதாஸைப் பொறுத்தவரையிலே ஏற்கனவே பாட்டாளி மக்கள் கட்சியினுடைய நிறுவனராக இருக்கிறார். எனவே அதன் காரணமாக அவர் மீண்டும் புதிதாக ஒரு கட்சியை தொடங்குவதிலும் சிக்கல் உள்ளது. அதாவது ஒரே நபர் இரண்டு கட்சியை தொடங்குவதிலே இருக்கக்கூடிய சிக்கல்கள் இருக்கிறது என சொல்லப்படுகிறது. எனவே அவரால் நேரடியாக இன்னொரு கட்சியை தொடங்க முடியாது.
அதனால் அவருக்குநெருக்கமாக இருக்கக்கூடிய சேலம் அருள் மூலமாக புதிய கட்சியை பதிவு செய்யக்கூடிய பணிகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரம் வெளியாகியுள்ளதோடு, அதில் அருள் ஆதரவாளர்கள் சிலர் கையெழுத்திட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாம தனித்து நிற்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. திமுகா அல்லது அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ராமதாஸ் தனது ஆதரவாளர்கள் 50 பேருக்காவது அவர் சீட்டு பெற்று கொடுக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறார். அவரது சார்பிலே ஆதரவாளர்கள் மாநில பொறுப்பு, மாவட்ட பொறுப்பு என பல பொறுப்புகளை கொடுத்திருக்கிறார். எனவே அவர்களை போட்டியிடுவதற்கு அனைவருக்கும் ஒரே சின்னம், உதாரணத்திற்கு ஒரு 50 பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்கள் 50 பேருக்கும் ஒரே மாதிரியான சின்னம் இருந்தால் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக இருக்கும். எனவே அதற்கு ஒரு கட்சி வேண்டும். எனவே அந்த அடிப்படையிலே ராமாதாஸ் இந்த முயற்சி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: பாமகவை திருட முயற்சி... அன்புமணி மீது ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு... 180 பக்க ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார்...!