×
 

ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்தது யார்? - தைலாபுரத்தில் களமிறங்கியது போலீஸ் தனிப்படை...!

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்த பாமாக்கா நிறுவனர் ராமதாசுடைய புகாரை ஏற்று தற்போது தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டியிருந்த பாமாக்கா நிறுவனர் ராமதாசுடைய புகாரை ஏற்று தற்போது தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தைலாபுரம் தோட்டத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டதாகவும் அந்த ஒட்டுக்கேட்பு கருவி வைத்த நபர் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாமக நிறுவன ராமதாஸ் தரப்பில விழுப்புரம் சைபர் கிரைம் போலீசரிடம் ஒரு புகாரானது அளிக்கப்பட்டது. அந்த புகாரை அடிப்படையாக கொண்டு தற்போது தனிப்படையானது அமைக்கப்பட்டுள்ளடு. 

முதற்கட்ட விசாரணையை அந்த தனிப்படை தொடங்கி இருப்பதாகவும் விழுப்புரம் எஸ்.பி.யே நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் தலைமையில் அந்த தனிப்படையானது அமைக்கப்பட்டிருப்பதாக தகவலானது வெளியாயிருக்கிறது. இந்த ஒட்டுக்கேட்பு கருவியை ஏற்கனவே ஒரு தனியார் சைபர் ஏஜென்சி நிறுவனம் கண்டுபிடித்ததாகவும் அவர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்திருந்த நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் இதை வைத்தது யார் என்ற நபரை கண்டுபிடிப்பதற்காக காவல்துறை இந்த விசாரணை தொடங்கியுள்ளனர். 

இதையும் படிங்க: அன்புமணியை கழட்டி விட்ட வன்னியர் சங்கம்? - மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தால் வெடித்தது சர்ச்சை...!

தைலாபுரம் தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரிக்க இருப்பதாகவும் மருத்துவர் ராமதாசிடமும் இது குறித்து விசாரித்து யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா என்ற அடிப்படையிலும் விசாரிக்கவும் தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஏதாவது சிசிடிவி காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளை அடிப்படையாக வைத்தும் மற்ற தொழில்நுட்ப ரீதியாக சயின்டிபிக் எவிடன்ஸ்களை சேகரித்தும் இந்த விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினத்திலிருந்து முதற்கட்ட விசாரணை தொடங்கி இருப்பதாகவும் இதற்கென்று ஒரு ஸ்பெஷல் டைம் தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வெச்சகுறி தப்பாது..! ஆட்சியில் பங்கு.. அன்புமணி திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share