×
 

ரேசன் அரிசி தரமற்றதா?... வார்த்தையை விட்ட செங்கோட்டையன்... ரவுண்ட் கட்டிய திமுக, அதிமுக...!

செங்கோட்டையன் என்ன அர்த்தத்தில் அப்படிச் சொல்கிறார்? ஆட்டுக்கும், மாட்டுக்கும் என்பதெல்லாம் இல்லை.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அமைச்சர்கள் வெங்கடரமணன், காந்திராஜ் உள்ளிட்டோர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தனர். விவாதத்தின் மையமாக அமைந்தது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரமும் விநியோகமும் தொடர்பான விவகாரம்.

ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே காரசாரமான பரிமாற்றங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ரேசன் அரிசியை ஆடு, மாட்டிற்கு பயன்படுத்துவதாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. செங்கோட்டையன் பேசி அமர்ந்ததுமே எழுந்த திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு,  செங்கோட்டையன் என்ன அர்த்தத்தில் அப்படிச் சொல்கிறார்? ஆட்டுக்கும், மாட்டுக்கும் என்பதெல்லாம் இல்லை. குறிப்பாக, உங்களுக்கு அரிசி எப்படி கொடுப்போம் என்று சொன்னால், நானும் இந்த உணவுத் துறையை 30 வருடங்களுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அதனால் சொல்கிறேன். கருப்பாக இருக்கிற அரிசியை, கடைசி நேரத்தில் வேறு வழியில்லாமல் கொடுப்பார்கள். அப்போதெல்லாம் அரிசி கிடைப்பதே மிகவும் கஷ்டம். மத்திய தொகுப்பிலிருந்து அரிசி கிடைப்பதும் கஷ்டமாக இருந்தது. அப்போது ஒரு மாதத்திற்கு அரை மாதம்தான் அரிசி கொடுப்பார்கள்.

ஆனால், நம்முடைய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி வந்த பிறகு, பாதுகாப்பான குடோன்கள் அமைக்கப்பட்டன. எந்தக் காலத்தில் எந்த உணவுப் பொருள் இருந்தாலும், அதை முறையாகப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  அவரும் உணவுத் துறை அமைச்சராக இருந்தார்; நானும் உணவுத் துறை அமைச்சராக இருந்தேன். ஆனால், அவர்தான் நிறைய கட்டமைப்புகளை உருவாக்கினார். அவருடைய காலத்தில் நம்முடைய தளபதி அவர்கள் அதற்காக நிதி ஒதுக்கி, நெல்லை மழையில் நனையாமல் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சக்கரபாணி அவர்கள் அதனை சிறப்பாகச் செயல்படுத்தினார்.

இதையும் படிங்க: மும்பைக்கு அடுத்த பிரம்மாண்ட நகரம்! 124 கிராமங்களை இணைத்து உருவாகும் ‘மும்பை 3.0’ எங்கெல்லாம் மாற்றம்?

செங்கோட்டையன் சொல்வது போல் “ஆட்டுக்கு, மாட்டுக்கு” என்றெல்லாம் இல்லை. இன்றைக்கு ரேஷன் அரிசியை அனைத்து மக்களும் சாப்பிடுகிறார்கள். நீங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறைகிறது என்பதால், எல்லா மக்களும் அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எப்படி காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதாகப் பேட்டி கொடுக்கிறீர்களோ, அதுபோல இன்றைக்கு ரேஷன் அரிசியை அனைத்து மக்களும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. நானே கூட சர்ச்சையைக் குறைப்பதற்காக ரேஷன் அரிசி சாப்பிட்டு வருகிறேன் எனக்கூறினார். 

இதையும் படிங்க: டிரம்ப் போட்ட மேப்புக்கு ஈரானின் பதிலடி! “கலிபோர்னியா எங்கள் பகுதி” என வெளியான பரபரப்பு வரைபடம்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share