×
 

“நிர்மல்குமார் அதிமுகவின் ஸ்பை... விஜயை அழித்துவிட்டு மீண்டும் வந்துவிடுவார்” - ஆர்.பி.உதயகுமார் திடுக் தகவல்...!

மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொல்றத எதையும் நம்பாதீங்க அவர் யாருனு தெரியுமா - அதிமுகவின் Spy தான் நிர்மல்குமார் விஜயை அழித்து விட்டு மீண்டும் அதிமுகவுக்கு வநதுவிடுவார்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலைமை தான் தமிழகத்தில் விஜய்க்கும் ஏற்படும் முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரை சமயநல்லூர் பகுதியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் முன்னால் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலேசானைகளை வழங்கி பேசினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: இன்றைய நேரத்தில் தவெக ஆட்சியில் இப்படி ஒரு ரீல்ஸ் அப்படி ஒரு ரில்ஸ் என தினம் தினம் வருகின்றது.  டெல்லியிலும் தான் ஊழலை ஒழிப்பேன் என்று ஆம் ஆத்மி கட்சி என அரவிந்த் கெஜ்ரிவால் வந்தார் அவருக்கு பின்னால் தேர்தல் வியூக வகுப்பாளர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க: ஓட்டுக்காக மாநில வளர்ச்சியை பலியிடலாமா.? சொல்லுங்க அமைச்சரே..! நயினார் சரமாரி கேள்வி..!!

அதே போல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு இந்தியாவிலேயே மாபெறும் தலைவர் விஜயை பொய்யாக மாயம் ஏற்படுத்து தமிழக மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றுள்ளது.  இன்னும் சிறிது காலத்தில் தமிழகத்தில் மறு தேர்தல் நடைபெற உள்ளது என தகவல் வெளிவந்துள்ளது

அமைச்சர்களை கண்டிப்பதாக விஐய் கூறுகிறார். பழனியில் 100 கோடி அரசு நிலம் தனியாருக்கு மோசடி செய்து ஊழல் செய்துள்ளது. இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை

மீண்டும் இடைத்தேர்தல் வந்தால் எவ்வாறு நடத்தலாம் என அதில் உள்ள சட்ட சிக்கல் குறித்து ஆலோசனை பெய்து வருகிறார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்ட நிலைமை தான் தமிழகத்தில் விஜய்க்கு ஏற்படும். ஆட்சிக்கு வந்த 75 ஆம் நாட்களில் சிபிஜ விசாரணை வளையத்தில் தவெக அரசு சிக்கியுள்ளது.

தவெக அரசின் அவல நிலையை அம்பலபடுத்த இனி அதிமுக வும் வீடியோ எடுத்து  ரில்ஸ் போடவும், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணைய தலங்களில் வெளியிட்டு டிஜிட்டல் தளத்தில் அதிமுகவும் இனி ரீல்ஸ் வெளியிடும்,

அதிமுக 75 ஆண்டுகள் கடந்த  கட்சி மொழிப்போரில் வென்று பல போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அதிமுக அதை யாராலும் அழிக்க முடியாது. வைகோவுக்கு நாடாளுமன்ற பதவி வழங்கினால் அவர் ஜால்ரா அடிப்பார். திமுகவினர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி தராததால் அதிலிருந்து விலகி விட்டு இப்போது விஜய்க்கு வைகோ ஜால்ரா அடிக்கிறார் எவ்வளவு பெரிய தலைவர் இப்படி ஆகிட்டார் வைகோ,

பழனியில் 100 கோடி சொத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு ஊழல் செய்துள்ளார் அமைச்சர் ரமேஷ். இனி வரும் காலங்களில் தமிழகத்தையே பட்டா போட்டு தவெகவினர் விற்று விடுவார்கள். 100 கோடி என்பது அவர்களுக்கு சிறு தவறு தான், பல ஆயிரம் கோடி திருடியிருந்தால் அது ஊழல் போல இது சிறு தவறு போல தவெகவுக்கு, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொல்றத எதையும் நம்பாதீங்க அவர் யாருனு தெரியுமா?.

எங்க கட்சி காரர் தான் தமிழகத்தில் மின்தடை ஏற்பட அமைச்சர் நிர்மல்குமார் தான் காரணம், நாங்க தான் நிர்மல்குமாரை தவெக வுக்கு அனுப்பி விஜயை முடித்து விட்டு வர அனுப்பியுள்ளோம். அதிமுகவின் Spy தான் நிர்மல்குமார் விஜயை அழித்து விட்டு மீண்டும் அதிமுகவுக்கு CT நிர்மல் குமார் வருவார்.

திமுகவை ஒழிக்க எடப்பாடி தான் தலைவர் என பேசியவர் தான் இதே நிர்மல்குமார். வைக்கோ வுக்கு ஒரு பதவி கொடுத்து விட்டால் போதும் அவரே தவெக வுக்கு கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுவார் வைகோ என்று பேசினார். 

இதையும் படிங்க: கரூரில் CM விஜய் எண்ட்ரி..! திமுகவுக்கு தூக்கம் போச்சா..? பூந்து விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share