×
 

விரைவில் கைதாகிறாரா ஆர்.பி.உதயகுமார்?... CM விஜய் குறித்த சர்ச்சை பேச்சு புகார்... முழுவீச்சில் காவல்துறை...!

தமிழக முதல்​வர் குறித்து அவதூறாக பேசி​ய​தாக, அதி​முக முன்​னாள் அமைச்​சர் உதயகு​மாருக்கு எதி​ராக தூத்​துக்​குடி எஸ்​பி அலு​வல​கத்​தில் தவெகவினர் ​நேற்று புகார் மனு அளித்​திருந்தனர். 

தூத்​துக்​குடி​யில் கடந்த 8-ம் தேதி மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்​வாகி​கள் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில், பேரவை மாநில செய​லா​ள​ரும், முன்​னாள் அமைச்​சரு​மான ஆர்​.பி.உதயகு​மார் பேசியது: விசு​வாசம் என்​றால் என்ன தெரி​யு​மா, கொடி பறக்கும்​போது கைதட்​டு​வது அல்ல. அந்​தக் கொடி பறப்​ப​தற்கு யார் இடையூறாக இருந்​தா​லும், அந்தக் கையை எடுத்​து​விட்டு கொடியை பறக்க விடு​வது​தான் விசு​வாசம்.

அதி​முகவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க,அழிக்க நினைக்​கிறான். அதி​முகவை யாரேனும் அழிக்க நினைத்​தால், அவர்களின் வம்​சமே நாச​மாக போகும். மேலும் காவிரி தண்​ணீரை பற்றி பேசி​னால், காவிரி​யா​வது தண்ணி​யா​வது, எங்க அண்ணி திரிஷாவைப் பற்றி யார் பேசி​யது என்று தவெக​வினர் கேட்​கிறார்​கள். இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலை​யில் உதயகு​மாருக்கு எதி​ராக தூத்​துக்​குடி புறநகர் மாவட்ட தவெக பொருளாளர் அருண்​கு​மார் எஸ்​பி அலு​வல​கத்​தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறி​யிருப்​ப​தாவது: முன்​னாள் அமைச்​சர் ஆர்​.பி.உதயகு​மார், தமிழக முதல்​வர் குறித்து தரக்​குறை​வாக​வும், ஒரு​மை​யிலும் பேசி​யுள்​ளார். இது தவெக தொண்​டர்​கள் மத்​தி​யில் மிகுந்த அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அவதூறு கருத்​துகளை​ அவர் தெரிவிக்​காத வகை​யில் சட்​ட நடவடிக்கை எடுக்க வேண்​டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: தமிழகமே கொந்தளிக்குது.. வாயை திறந்து பேசுங்க விஜய்... வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!

இந்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமாரிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தவெகவிற்கு பெரும் தலைவலியாக மாறியது. அதுவும் சென்னையில் விசாரணை நடத்தாமல் தஞ்சாவூர் வரை அழைத்துச் சென்றதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. 

இந்நிலையில் ஆர்.பி.உதயகுமாரிடம் மதுரையில் வைத்து ஆலோசனை நடத்தப்படுமா? அல்லது தூத்துக்குடிக்கு கைது செய்து அழைத்துச் செல்லப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

இதையும் படிங்க: பட்டை நாமமா? மொட்டையா? - பட்ஜெட்டில் மக்களுக்கு என்ன தரப்போகிறார் விஜய்... ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share