×
 

“சட்டமன்றம் ஜால்ரா மன்றமாகிவிட்டது...” - மதுரை மண்ணில் நின்று விஜய் அரசை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!

சட்டமன்றம் ஜால்ரா மன்றமாக மாறியுள்ளது. மக்களின் பிரச்சனைகளை பேசும் சூப்பர் ஸ்டாராக எடப்பாடி உள்ளார். 

ஜல்லிக்கட்டு குறித்து தவறாக பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்எல்ஏ கருப்பையாவை மற்றும் தவெக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரை அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர். பி உதயகுமார் மற்றும் முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் அழைத்துவரப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

ஆர்ப்பாட்டத்தின்போது தவெக எம்எல்ஏ மற்றும் தவெக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்

இதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்:  உயிரிக்கும் மேலானது ஜல்லிக்கட்டு போட்டி. உச்ச நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த போது ஜென்சி தலை முறை நாடு முழுவதிலும் களத்தில் இறங்கினர்

இதையும் படிங்க: ஆன்லைன் மோசடியால் கண்ணீர் வடிக்கும் மக்கள்... சி.எம்.விஜயை உசுப்பிவிடும் ஆர்.பி.உதயகுமார்...!

தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பார்த்து அறப்போராட்டத்திற்கு உலகத்திற்கு பாடம் கற்பித்து கொடுத்தது ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எடப்பாடி தலைமையில் அதிமுக அரசுதான் அவசர சட்டத்தில் நிரந்தர சட்டத்திலும் பாரம்பரிய கலாச்சாரத்தை அடையாள ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டது. 

தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஜல்லிக்கட்டு குறித்து யாராவது தவறாக பேசுவார்களா? இனிமேல் யாரும் பேசக்கூடாது என்பதற்காக தான் இது போன்ற கண்டன ஆர்ப்பாட்டம்; சிஎம் சார் சாரி வேணாம் நீதி வேண்டும் என்றார். 

அமைச்சர் கலைஞரை கருணாநிதி என கூறியதற்காக  மன்னிப்பு கேட்ட முதலமைச்சர்; ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் என கூறிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்ய சொல்லி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். 

அதிமுக போராட்டம் அறிவித்ததால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர். முதலமைச்சர் வாய் திறக்கமாட்டார் , ஸ்கிரிப்ட் இருந்தா தான் வாய் திறப்பார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஜல்லிக்கட்டு குறித்து பேசியுள்ளார். அவர் எப்படி பேசினார். இது தான் உங்கள் நிலைப்பாடா?. 

சட்டமன்றம் ஜால்ரா மன்றமாக மாறியுள்ளது. மக்களின் பிரச்சனைகளை பேசும் சூப்பர் ஸ்டாராக எடப்பாடி உள்ளார். பேசாத முதலமைச்சர் சண்டை போடும் எதிர்கட்சி தலைவர ஆனால் மக்களின் பிரச்சனைகளை சொல்லும் சூப்பர் ஸ்டாராக எடப்பாடி உள்ளார்.

110 நாட்களில் 28 ஆயிரம் கடன் வாங்கியுள்ளது. இந்த அரசின் ஆயுட்காலம் எண்ணப்படுகிறது. இங்கவுள்ள வெங்காயம் விலை குறைக்க முடியல  வெங்காயம் பிரதமர் ஆகிறாராம், அமெரிக்கா ஜனாபதி ஆகிறாராம். இது ரீல்ஸ் ஆட்சி தான் ரியல் அல்ல;  பொய்க்கால் குதிரை ஆட்சி இது

பிரதமர் வேட்பாளர் விஜயா? ராகுல் காந்தியா என பிரச்சனை எழுகிறது. இங்கு 65 % மக்கள் தவெகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். மக்களின் தீர்ப்பு ராகுலும் விஜயும் வரமுடியாது எடப்பாடியார் கைகாட்டும் நபர் தான் பிரதமராக வருவார்கள்; மீண்டும் அம்மாவின் ஆட்சி அமரும்; பைத்தியங்களுக்கு பாடம் புகட்டப்படும்

மேட்டூரில் அணை  கட்டிய செலவை விட அணை திறக்க செலவு செய்து பாட்டிக்கு கண்ணாடி போட்டார்.உலகத்தில் MGR ஒருவர் மட்டும் தான். கண்ணாடி போட்ட பாட்டி ரகசியத்தை உடைத்துவிட்டார். இந்த டிராமா எல்லாம் எத்தனை நாளுக்கு என பார்க்கலாம்; இந்த ஜல்லிக்கட்டு மீது அக்கறை இருக்குமேயானால் சோழவந்தான் MLAவை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: லைக்கிற்கு தர்ற முக்கியத்துவத்தை விவசாயிகள் லைஃப்-க்கு கொடுங்க... சி.எம்.விஜய்க்கு பறந்த அட்வைஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share