×
 

நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு... பிச்சை எடுப்பது ஏன்? - ஆதவ் அர்ஜுனாவை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!

இன்றைக்கு விசுவாச தொண்டர்களை விலைபேச முயற்சிக்கின்ற சனிக்கிழமைகளை ஞாயிற்றுக்கிழமைகளிலே விடுமுறை நாட்களிலே கட்சியில் இணைப்பு விழா தொடரும் என்று சொல்லி அதிகார மையத்தின் முதலீடு போட்ட அமைச்சர் அவர்களே.

90% அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தொண்டர்கள் தவெகவில் இணைவதாக, பல்வேறு கட்சிகளில் தாவி 10 வருடங்களிலே பல கட்சிகளுக்கு தாவி இன்றைக்கு முதலீடு செய்து அமைச்சராக, அதிகார மையமாக விளங்குகிற அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார் என ஆதவ் அர்ஜுனாவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

தமிழ்நாட்டில் கேட்க நாதி இல்லை என்ற நிலையிலே தான் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். உங்கள் கட்சியின் மீதும், தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும், நீங்கள் நம்பிக்கையை இழந்து விட்டீர்களா? அல்லது உங்கள் தலைவர் மீது நீங்கள் நம்பிக்கை இழந்து விட்டீர்களா?. நாக்கை தொங்க போட்டுக்கொண்டு புரட்சி தலைவர் எம்ஜிஆர் புரட்சி தலைவி அம்மா புரட்சி தலைவர் ஐயா எடப்பாடியார் வழிவந்த தொண்டர்களை கட்சியிலே சேருங்கள் என்று பிச்சை எடுக்கின்ற மாதிரி கூவி கூவி கூவி அழைக்கிறீர்களே. இன்றைக்கு விஜயின் மக்கள் செல்வாக்கு கேள்விக்குறியாகி இருக்கிறதா அல்லது அதை நிலைநிறுத்துவதற்காக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலே தொண்டர்களிடத்திலே பிச்சை கேட்கிறீர்களா?.

விசுவாசம்உள்ள தொண்டர்களை விலை பேச தொடர்ந்து முயற்சிக்கிறீர்களே. இது எந்த வகையிலே நியாயம் தர்மம்.  இதைக்கெல்லாம் விஜய் அவர்கள் தடை போடுவாரா அல்லது தடையின்று இந்த நாடகத்தை அரங்கேற்றுவதற்கு அனுமதிப்பாரா என்பதுதான் இன்றைய தொண்டர்களுடைய கேள்வியாக இருக்கின்றது. அதிகார ஆசை காட்டி வருகின்ற புதிய அதிகார மையத்தினுடைய அமைச்சர் அவர்கள் தொடர்ந்து இன்றைக்கு கூவி கூவி அழைப்பதை பார்த்தால், இந்த கன்றாவி காட்சிகளை எல்லாம் நாம் எப்படி கடந்து போவது என்பது தெரியவில்லை. நெஞ்சு பொறுக்கவில்லை. வேதனையிலே அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள் உழன்று போயிருக்கிறார்கள். துவழ்ந்து போயிருக்கிறார்கள் என்று நீங்கள் கற்பனை செய்கின்றீர்கள். இன்றைக்கு விசுவாச தொண்டர்களை விலைபேச முயற்சிக்கின்ற சனிக்கிழமைகளை ஞாயிற்றுக்கிழமைகளிலே விடுமுறை நாட்களிலே கட்சியில் இணைப்பு விழா தொடரும் என்று சொல்லி அதிகார மையத்தின் முதலீடு போட்ட அமைச்சர் அவர்களே.

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்திற்கு கொக்கி போடும் தவெக! தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி தருவதாக பேச்சு!

உங்களுடைய அரசியல் பின்புலம் என்ன?, நீங்கள் எத்தனை கட்சிகள் இந்த ஐந்து ஆண்டுகளிலே மாறி வந்திருக்கிறீர்கள்?,  முதலிலே திராவிட முன்னேற்ற கழகம், அதற்கு பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடையில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலே சேர முயற்சி, இன்னும் எத்தனை கட்சிகள் எல்லாம் இருக்கிறதோ அத்தனையிலும் முயற்சி செய்துவிட்டு கடைசி புகழிடமாக இன்றைக்கு விஜயிடம் அடைக்களம் ஆகி இருக்கிறீர்கள்.

 நீங்கள் இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அடைக்களம் பெறுவதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அடையாளத்தை அளிக்க முயற்சிக்கிற சித்தாந்தம் என்பது உங்களை நீங்களே யானை தன் தலையிலே மண்ணை வாரி பூச்சி கொள்வதை போல, உங்களை நீங்களே அழித்து கொள்கிற செயல்.  ஆகவே இறுதி எச்சரிக்கையாக சொல்லுகிறோம் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தின் கோடிக்கணக்கான தொண்டர்களிலே சாமானிய தொண்டராக இறுதி எச்சரிக்கையாக இந்த ஆள் பிடிக்கிற வேலையும், அதிகாரம் வழங்குகிறோம் என்கிற நாடகத்தையும் இனியும் நீங்கள் தொடர்வீர்களானால் நீங்கள் கடும் பின்விளைவுகளை அரசியல் பயணத்திலே நீங்கள் சந்திக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். 

இதையும் படிங்க: "இது ஒன்னும் லாட்டரி வியாபாரம் இல்ல"..! அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு அதிமுக பதிலடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share