×
 

ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க விஜய்... அரசு வேலையை அல்வா போல அள்ளித் தர ஆர்.பி.உதயகுமார் எதிர்ப்பு...!

எந்த அரசியல் கட்சிகளும் தலைவர்களுக்காக ,கட்சிக்காக தொண்டர்கள் தியாகம் செய்தால் ஆளுங்கட்சி  அதிகாரத்தை பயன்படுத்தி  அரசு வேலை கொடுக்கவில்லை

ஊரான் வீட்டு நெய்யில் ஸ்வீட் செய்யாதீங்க விஜய். மக்கள் வரிப்பணத்தில்  த.வெ.க. கட்சியை வளர்க்க நினைத்தால் அதை கண்டித்து நியாயம் கேட்டு தமிழகத்திலே இளைய சமுதாயம் புரட்சி வெடிக்கும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ,முதல்வர் விஜய் மீது  தாக்கு 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மக்கள் வரிப்பணத்தில் த.வெ.க கட்சியை வளர்க்காதீர்கள் விஜய் அண்ணா என்று தமிழகமெங்கும் இளைய சமுதாயம் எதிரொலிக்கிறது  அபயக்குரல்.  இன்ஸ்டாவிலே கட்சியை தொடங்கி, இன்ஸ்டாவிலே தேர்தல் பிரச்சாரம் செய்து ,இன்ஸ்டாவிலே தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது இன்ஸ்டால் தயவில் தற்பொழுது முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திருக்கும் முதல்வர் விஜய் தவணை முறையில் கட்சியை வளர்க்க அடுத்த கட்சி எம்எல்ஏகளை அபகரிப்பது ,தவணை முறையில் திட்டங்களை அறிவிக்கிறார்.

 கரூரில்  கடந்த ஆண்டு  செப்டம்பர் 7 தேதி  விஜய் பங்கேற்ற அந்தக் கூட்ட நெரிசலிலே சிக்கி 41 பேர்கள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அதற்குப் பின்பு 285 நாட்கள் கழித்து கரூர் செல்லாத நிலையில் முதல்வரான பின் முதல் முறையாக முதல்வர் விஜய்கரூர் செல்கிறார் 
கரூர் பிரச்சார கூட்டத்தில் விஜய்க்காக சிக்கி சின்னாபின்னமாக உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு அரசு துறையில் பணி நியமன ஆணைகளில் வழங்க உள்ளார்.
 த.வெ.க. கட்சியின் வீர தியாகிகளுக்கு அரசு நிவாரணம், அரசு வேலை வழங்கும் இந்த முறை இதுவரை தமிழக அரசு வரலாறு காணாத ஒரு புதிய முறையாக அமைந்திருக்கிறது .

இதையும் படிங்க: முதல்வராக கரூரில் கால் வைக்கும் விஜய்... கொடுத்த வாக்கை நிறைவேற்றுவாரா? - இன்று காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்...!

அப்போது  விஜய்  ஊரான் வீட்டு நெய்யிலே ஸ்வீட் செய்யாதீங்க ஸ்டாலின் சார் என்று மூச்சுமுட்ட முச்சந்தியில் நின்று முழக்கமிட்ட முதல்வர் விஜய் அதையெல்லாம் தற்போது காற்றில் பறக்கவிட்டு இப்போது த.வெ.க கட்சியின் கூட்டத்திலே இறந்ததால் அரசு வேலை, அரசு நிவாரணம் என்ற ஒரு புதிய அத்தியாயத்தை, ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி இளைய தலைமுறைக்கு ஒரு புதிய அவநம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக உள்ளது.

அம்மா மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்கு தொடுக்கப்பட்டு சிறைச்சாலை செல்லும் நிலை வந்த போது அந்த கொடுமையை கண்டித்து நூற்றுக்கணக்கான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அம்மாவின் விசுவாச தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்த போது அந்த வீர தியாகிகளின் குடும்பங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதிமுக ஆளுகிற கட்சியாக இருந்தாலும் அதிமுக கட்சியில் இருந்துதான்  அந்த குடும்பங்களுக்கு குடும்ப நிவாரண நிதி வழங்கிய வரலாறை முதல்வர் விஜய்க்கு யார்  சொல்லிக் கொடுப்பது.

 அண்ணா திராவிட கழகம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களுக்காக ,கட்சிக்காக தியாகம் செய்தால் ஆளுங்கட்சி  அதிகாரத்தை பயன்படுத்தி  அரசு வேலை கொடுக்கவில்லை ஆனால் தற்பொழுது தவறான ஒரு முன்னுதாரணமாக மாறிவிடும் என்கிற அச்சம் இன்றைக்கு இளைய சமுதாயத்திடம் ஏற்பட்டு இருக்கிறது. 

 எந்த அரசியல் கட்சியும் செய்ய துணியாத இந்த அறிவிப்பை  வெளியிட்டு அதை செயல்படுத்த  கரூர் செல்கிறார் என்று சொன்னால், அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன் கொரோனா காலத்தில் அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது   அரசின் சார்பிலே பல்வேறு நிவாரணங்கள் வழங்குகிற போது கூட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே அம்மா கிச்சன், எடப்பாடியார் கிச்சன் என்ற பெயரில் உணவுப் பொருட்கள் ,உணவுகள் மக்களுக்கு வழங்கப்பட்டது அந்த வரலாறையும் முதல்வர் விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நான் எதையும் செவி கொடுத்து கேட்கமாட்டேன் என்று சொல்லுகிற முதல்வர் விஜய் அவர்களே  இந்த புரட்சிகரமான அறிவிப்பு ,இந்த புரட்சிகரமான விழாவை பார்த்து தமிழகத்தின் துடிப்பு மிக்க விழிப்புணர்வு மிக்க  இளைய சமுதாயம் கொதித்து எழுந்து ,மக்கள் வரிப்பணத்தில் த.வெ.க கட்சியை வளர்ப்பதற்கு விஜய் அடித்தளம் விடுகிறாரா என்று நியாயம் கேட்டு ஒருவேளை தமிழகத்திலே இளைய சமுதாய புரட்சியில் இறங்கி விட்டால் என்ன செய்வார்  முதல்வர் விஜய் ?

இளைஞர்கள் விழித்துக் கொண்டு புரட்சியில் இறங்கினால் அது என்ன மாதிரியான புரட்சியாக இருக்கும்  நிச்சயமாக உறுதியாக சொல்லுகிறேன் அன்றைக்கு இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து உலகத்துக்கே வழிகாட்டுகிற அந்த மொழிப்போர் புரட்சியைப் போல இருக்கும்

அரசு பணத்தில் த.வெ.க கட்சியை வளர்க்கிற இந்த அநியாயத்தை தட்டி கேட்கிற உரிமை புரட்சி நாம் இளைய சமுதாயத்திலும் ஏற்படும் .அப்படி அந்த புரட்சி ஏற்பட்டு விட்டால்  முதல்வர் விஜய்யின் வசீகர வசனம் பேசி த.வெ.க கட்சியும், ஆட்சியும் நடத்த முடியாமல் போய்விடுவோம் என்கிற அச்சத்திலே காவல்துறையை வைத்து அடக்கப் பார்ப்பார்கள். சிறையில் அடைக்க பார்ப்பார்கள். 

இனிமேலாவது  இந்த கரூர் அரசு விழாவிற்கு பின்பு இளைய சமுதாய விழித்தெழுந்து , புதிய எழுச்சியை புரட்சியை இந்த தமிழகத்திலே உருவாக்கும் அதுவரை பொறுத்திருப்போம் என கூறினார்.

இதையும் படிங்க: முதல்வர் ஆன பின் முதல் முறை கரூர் விசிட்... தூள் கிளப்ப காத்திருக்கும் விஜய்... இன்றைய மாஸ்டர் பிளான் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share