×
 

அதிமுகவின் ஆணி வேரில் ஆசிட் ஊற்றுவதை... அமைச்சர் செங்கோட்டையனுக்கு ஆர்.பி.உதயகுமார் நேரடி எச்சரிக்கை...!

அதிமுகவின் ஆணி வேரில் ஆசிட் ஊற்றுவதையாவது நிறுத்திக் கொண்டால் நல்லது என முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் எச்சரிக்கை

மதுரையில் இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளிலே போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.

 அதைத் தொடர்ந்து அதிரடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரட்டை இடை சின்னத்தில் நின்று, விஜய்யும் வேண்டாம், விசிலும் வேண்டாம், தவெகவும் வேண்டாம் என்று தேர்தலில் வெற்றி பெற்ற விராலிமலை தொகுதி விஜய் பாஸ்கர், கரூர் தொகுதி எம்ஆர் விஜய் பாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயகுமார்,  அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா, மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல் தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகியோர்களும் அதிரடியாக தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்கள். 

வாக்களித்த மக்களின் விரல்மை காயும் முன்னே இவர்கள் திடீரென்று ராஜினாமா செய்ததின் காரணம் என்ன? எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து, ஆளுங்கட்சியான தவெகவிற்கு சென்று அங்கே ஆளுங்கட்சிக்கான அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் இவர்களின் ஒரே நோக்கமே தவிர, வேறு என்ன காரணம்? மக்களுக்கு சேவை செய்வதற்கா ? தவெகவில் தற்போது இவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கிறது.மக்களுக்கு சேவை செய்வது ஒன்றுதான் நோக்கம் என்றால், இவர்கள் வெற்றி பெற்ற அதிமுகவில் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வதில் எந்த தடையும் இல்லை. மக்கள் அவர்களுக்கு அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள். 

இதையும் படிங்க: சென்னையில் 750 புதிய AC மின்சார பேருந்துகள்..! விஜய் தொடங்கி வைத்த மெகா திட்டம்..!!

கருத்து வேறுபாடு இருக்குமானால், தலைமையிடம் பேசி தீர்வு காணலாம். அதற்கும் வழி இருக்கிறது. அதை விடுத்து, தங்களின் அதிகார பசியை போக்கிக் கொள்வதற்காக ஆளுங்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு வளர்த்து ஆளாக்கிய தலைமையை விமர்சனம் செய்வது என்பது ஒரு அரசியல் இலக்கண பிழையாகும்.

 தற்போது இடைத்தேர்தல் தடையை நீக்கக் கூறி, ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இதனால் தற்போது உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடர்கிறது. ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் துரோகத்தை இந்த நாட்டில் யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத நிலைதான் நாம் இப்போது எதார்த்தத்தை பார்க்கிறோம்.  இடைத்தேர்தல் தீர்ப்பில்  நம் மக்கள் நிச்சயமாக இதற்கு தகுந்த பாடம் புகட்டுகிற தீர்ப்பை வழங்குவார்கள். 

 தற்போது ஈரோடு மாவட்டம் கோபியில்  அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து இன்னும் 10 எம்எல்ஏக்கள் தவெக கட்சியில் இணைய உள்ளனர். மீதி உள்ளவர்களும் இன்னும் ஆறு மாதங்களில் வந்துவிடுவார்கள். அதன் பின்னர் அதிமுக பூஜ்யமாகிவிடும் என்று தனது பேராசையை அதிமுகவின் ஜாதகத்தை தவெகவிற்கு சென்றதற்கு பிறகு, அவர் வெளியிட்டு, தன்னுடைய தவெக விசுவாசத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறார்கள். 

ஏற்கனவே ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இலவுகாத்த கிளியாக தேர்தல் எப்போது வரும் நாம் எப்போது நிற்கப் போகிறோம் என்று காத்துக் கொண்டிருக்கிறபோது, அதிமுகவில் அடையாளம் பெற்றவர்கள் அதிகாரம் பெற்றவர்கள் வாழ்வு பெற்றவர்கள் வரலாறு படைத்தவர்கள் எல்லாம் காலத்தின் கட்டாயத்தினால் அதிமுகவிலிருந்து விலகி அதிகாரத்திற்காக, ஆளுங்கட்சியான தவெகவில் சேர்ந்து விஜய் தலைமைக்கு புதிதாக விசுவாசத்தை காட்டி தங்களை நிறைநிறுத்திக் கொள்வதற்காக ,எதை வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என ஆணவத்தின் உச்சத்தில் பேசுவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இது அரசியல் அநாகரிகத்தின் உச்சம்.

 ஒன்று மட்டும் அவர்களுக்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.  தங்களுக்கு உயர்வு கொடுத்த அதிமுகவை விட்டு தாங்கள் சென்றதற்கு பிறகு அதிமுகவை காப்பாற்ற தாங்கள் பால் வார்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதிமுகவின் ஆணி வேரிலே ஆசிட் ஊற்றுவதையாவது தாங்கள் நிறுத்திக் கொண்டால் நல்லது என்பதுதான் நாட்டு மக்களின் கருத்து. 

ஏனென்றால் மாற்றுக் கட்சிக்கு தாங்கள் சென்றதற்கு பிறகும் சட்டை பாக்கெட்டில்  அம்மாவின் திருவுருவ படம் வைத்திருக்கிறீர்கள். தாங்கள் அம்மா மீது கொண்டிருக்கிற விசுவாசத்தின் வெளிப்படையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், அதிமுக அரசியல் களத்தில் ஆட்சியிலே இருந்தாலும், இல்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்கின்ற போதுதான் தங்களை ஆளாக்கிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய உழைப்பு, தியாகம், புகழ், செல்வாக்கு, அர்ப்பணிப்பு ஆகியவற்றை இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் நாம் எடுத்துச் செல்ல முடியும். 

இருபெரும் தெய்வங்களின் மங்கா புகழை எடுத்துச் செல்ல வேண்டும் என்று சொன்னால், அந்த புனித பணியைத்தான் இன்றைக்கு  எடப்பாடியார் அவர்கள் இத்தனை சோதனைகளையும் தாங்கி தமிழ்நாட்டு மக்களும், கழகத் தொண்டர்களுக்கும், விசுவாசமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக உழைத்து வருகின்றார்கள்.

 அவருடைய ஆளுமையில் தங்களுக்கு ஏதேனும் வேறுபாடு இருக்கலாம். உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். அதனால் தற்போது தவெகவிற்கு சென்றுவிட்டீர்கள். எங்கே இருந்தாலும் வாழுக, வளமுடன் என்று உங்களை மனதார வாழ்த்தியவர் தான் எடப்பாடியார் அவர்கள். ஆகவே வெற்றியின் மயக்கத்தில் உள்ள செங்கோட்டையன் அவர்களே தங்களின் மதியை இழந்து விட வேண்டாம் என்பதுதான் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் தங்களிடம் எதிர்பார்ப்பது. 

விசுவாச தொண்டர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். இல்லையென்றால் காலம் மாறும், காட்சிகள் மாறும், வெற்றி பெற்றவர் தோற்பதும், தோற்றவர் வெற்றி பெறுவதும், மேலே இருப்பவர் கீழே வருவதும், கீழே இருப்பவர் மேலே வருவதும் தான் இயற்கையின் விதி. அதுதான் தமிழக அரசியல் வரலாறு. ஆகவே தமிழக அரசியல் வரலாறு படைத்த தாங்கள் துரோக வரலாற்றிற்கு துணை போக வேண்டாம். என கோடிக்கணக்கான விசுவாச தொண்டர்களின் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

இதையும் படிங்க: கேப்டனுக்கு புகழ் வணக்கம்.! மனிதநேயம், துணிச்சல் தன்னலமற்ற சேவை..! முதல்வர் விஜய் புகழாரம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share