அதிமுக வேட்பாளர் ஆர்.பி உதயகுமார் வேட்பு மனுத்தாக்கல்... சாலையை அடைத்து ஒரு படையே சென்றதால் மக்கள் அவதி..!
அதிமுக வேட்பாளர் ஆர் பி உதயகுமார் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு ஏராளமான மக்களை அழைத்துச் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், அவர் ஏற்கெனவே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். ஆர்.பி. உதயகுமார் 1973 ஏப்ரல் 10 அன்று மதுரையில் பிறந்தார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாக அறியப்படும் அவர், 1990களின் தொடக்கத்தில் சமூக சேவைப் பணிகளில் ஈடுபட்டு, 1993-94ல் சிறந்த சமூக சேவகருக்கான அங்கீகாரத்தைப் பெற்றார்.
அம்மா பேரவை அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருமங்கலம் தொகுதியில் முதன்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு 2016ல் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 தேர்தலிலும் திருமங்கலம் தொகுதியைத் தக்க வைத்துக்கொண்டார். அந்தத் தேர்தலில் அவர் 1,00,338 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளரை 14,087 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதன் மூலம் அதிமுகவின் தென் மண்டலத்தில் உள்ள வலுவான தொகுதிகளில் ஒன்றைத் தொடர்ந்து கைப்பற்றி வந்தார்.அமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளை கவனித்தார்.
2011 முதல் 2013 வரை தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும், பின்னர் 2015 முதல் 2021 வரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சராகவும் பணியாற்றினார். 2022 ஜூலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2026 தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாட்ஷா படத்தில் ரஜினியுடன் வரும் நாயும், காங்கிரஸ் கட்சியும் ஒண்ணு... நடிகை விந்தியா சர்ச்சை பேச்சு...!
இந்த நிலையில், அதிமுக வேட்பாளர் ஆர். பி உதயகுமார் இன்று மனு தாக்கல் செய்கிறார். அதற்காக சென்ற அவர், மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தொண்டர்கள் புடைசூழ நடந்து சென்றார். சாலை முழுவதும் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நிரம்பி இருந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேர்ப்பு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதுபோல ஒரு படையே கிளம்பிச் சென்று விடுவதால் பெரும் இன்னலுக்கு ஆளாகுவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்த முறை இரட்டை இலை தான்..! ஆயிரம் விளக்கு தொகுதியில் வளர்மதி வாக்குச் சேகரிப்பு..!