×
 

இம்மி பிசறாத கணிப்பு!! சொல்லி அடித்த செய்கை!! விஜய் Good Book-கில் இடம்பிடித்தார் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி!!

தவெக விஜய் வெற்றி குறித்த ரவி கணிப்பு பலித்தது: ஓய்வு ஐ.பி.எஸ். அதிகாரிகள் புதிய பதவிக்கு காய் நகர்த்தல்!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 41 சதவீத வாக்குகளுடன் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனக் கணித்த ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ரவியின் செல்வாக்கு இப்போது உயர்ந்துள்ளது. புதிய ஆட்சியில் முக்கியப் பொறுப்புகளைப் பெற ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவரை அணுகி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரவி, 1991-ம் ஆண்டு தமிழக காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரியாகப் பணியில் சேர்ந்தவர். 32 ஆண்டுகள் பணியாற்றி 2022-ல் டி.ஜி.பி. பதவியில் ஓய்வு பெற்றார். 

தேர்தலுக்கு முன்பு ஓய்வுபெற்ற போலீசார் 2,340 பேரின் உதவியுடன் 2.34 லட்சம் பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில் தவெக 41 சதவீத வாக்குகள் பெற்று 121 தொகுதிகளில் வெற்றி பெற்று விஜய் தலைமையில் தனிப் பெரும்பான்மை ஆட்சி அமையும் என வீடியோ வெளியிட்டு அறிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயித்தது கருணாநிதி சென்டிமெண்ட்!! ஆட்சியை தக்க வைப்பதில் தடுமாறும் திமுக!! தொடரும் தோல்விகள்!

இந்தக் கணிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. ரவி முன்பு தி.மு.க. கூட்டணியில் சீட் கோரியதாகவும், கிடைக்காததால் தி.மு.க.வுக்கு எதிராகப் பேசி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அவர் தவெகவின் இரண்டாம் கட்டத் தலைவர் செங்கோட்டையனின் நெருங்கிய உறவினர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இருப்பினும், ரவியின் கணிப்பு கிட்டத்தட்ட பலித்துள்ளது. தவெக 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. விஜய் முதலமைச்சர் பொறுப்பேற்க உள்ள நிலையில், ரவியின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.

ஒரு ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கூறுகையில், “தேர்தல் கமிஷன் தான் தற்போது சென்னை, தாம்பரம் உள்ளிட்ட போலீஸ் கமிஷனர்களை நியமித்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு போலீஸ் கமிஷனர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் உள்ளிட்ட பல முக்கியப் பதவிகள் மாற்றப்படும். எனவே, புதிய பதவிகளைப் பெற தற்போதுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் ரவியின் உதவியை நாடி வருகின்றனர்” என்றார்.

ரவியின் துல்லியமான கணிப்பு தமிழக அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆட்சி அமையும் நிலையில், ஓய்வுபெற்ற அதிகாரிகளின் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்துதான் அடுத்த கட்ட நகர்வுகள் அமையும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: ஜெயித்தது கருணாநிதி சென்டிமெண்ட்!! ஆட்சியை தக்க வைப்பதில் தடுமாறும் திமுக!! தொடரும் தோல்விகள்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share