×
 

100 ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அதிரடி மாற்றம்!! இனி மாநிலங்கள் கிடையாது! 80 கோட்டங்கள் உருவாக்கம்!

ஆர்.எஸ்.எஸ்., நிர்வாக அமைப்பில் மாநிலங்கள் நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த இந்தியாவும், 80 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தனது நிர்வாக அமைப்பில் பெரிய அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதுவரை இருந்த மாநில அமைப்புகள் முழுமையாக நீக்கப்பட்டு, மொத்த இந்தியாவும் 80 கோட்டங்களாக (சம்பாக்) பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானாவில் கடந்த 13 முதல் 15 வரை நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு அறிவிக்கப்பட்டது. பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

தற்போது தாலுகா, மாவட்டம், விபாக், மாநிலம், ஷேத்ரம் என பல அடுக்குகளில் இயங்கி வந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், மாநிலங்கள் என்ற அமைப்பே இனி இருக்காது. பெரிய மாநிலங்கள் பல கோட்டங்களாக பிரிக்கப்படும். தமிழகம் மட்டும் 6 கோட்டங்களாக பிரிக்கப்பட உள்ளது. மொத்தம் 45 மாநிலங்களாக இருந்த அமைப்பு, இனி 80 கோட்டங்களாக மாற்றப்படும்.

இதையும் படிங்க: ஆந்திரா, தெலுங்கானாவில் தலையெடுக்கும் போதை கலாசாரம்!! திணறும் ஆட்சியாளர்கள்! முதல்வர்கள் தீவிர ஆலோசனை!

இதுகுறித்து பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே கூறுகையில், “ஆர்.எஸ்.எஸ். அமைப்புப் பணிகளை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும். அதற்கு அமைப்பின் அலகுகள் சிறியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு பகுதியிலும் தீவிர கவனம் செலுத்த முடியும்” என்றார்.

இந்தப் புதிய கட்டமைப்பு ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழா முடிந்த பிறகு முழுமையாக அமலுக்கு வரும். அதுவரை தற்போதுள்ள அமைப்பே தொடரும். நான்கு முதல் ஆறு கோட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ‘பிரதேசம்’ என அழைக்கப்படும். விபாக் மற்றும் ஷேத்ரம் அமைப்புகள் தொடரும்.

புதிய மாற்றத்தின்படி, மாநிலத் தலைவர், மாநிலச் செயலர், மாநில அமைப்பாளர் போன்ற பதவிகள் கோட்டத் தலைவர், கோட்டச் செயலர், கோட்ட அமைப்பாளர் என மாற்றப்படும். அடுத்த பொதுக்குழு கூட்டத்துக்கு புதிய கோட்டங்களின் நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்தப் பெரிய நிர்வாக மாற்றம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: நாளை சென்னை வருகிறார் பியூஸ் கோயல்..!! தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share