இந்தியாவின் செல்வாக்கு கூடிக்கிட்டே வருது! மோடியை வெல்கம் பண்ண தயாரா இருக்கோம்! ரஷ்ய அமைச்சர் பெருமிதம்!
இந்தாண்டு ரஷ்யா வரும் பிரதமர் மோடியை வரவேற்க தயாராக உள்ளோம் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். உலகளவில் 21ம் நூற்றாண்டின் வல்லரசாகவும் இந்தியாவில் செல்வாக்க வளர்ந்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்தியா-ரஷ்யா உறவுகள் குறித்த சர்வதேச மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றியபோது, பிரதமர் நரேந்திர மோடியை 2026-ம் ஆண்டு ரஷ்யாவுக்கு வரவேற்க தயாராக இருப்பதாக அறிவித்தார். “நாங்கள் பிரதமர் மோடியை ரஷ்யாவில் வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு காலத்தால் நிரூபிக்கப்பட்ட “நேர்த்தியான நட்பு” என்று வர்ணித்த லாவ்ரோவ், இந்த உறவு சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒருவருக்கொருவர் மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் வலுவாக உள்ளது என வலியுறுத்தினார். அதிபர் விளாடிமிர் புடின் கடந்த ஆண்டு டெல்லி வந்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மேலும் உறுதிப்படுத்தப்பட்டன என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
பொருளாதார ஒத்துழைப்பைப் பொறுத்தவரை, 2025-ம் ஆண்டில் இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகம் சுமார் 68 பில்லியன் அமெரிக்க டாலரை (தோராயமாக 5.59 லட்சம் கோடி ரூபாய்) எட்டியுள்ளது. இதை 2030-க்குள் 100 பில்லியன் டாலராக (சுமார் 9.32 லட்சம் கோடி ரூபாய்) உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.
இதையும் படிங்க: 13 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை..! திமுக நிர்வாகியின் குரூர புத்தி..!! தட்டி தூக்கிய போலீஸ்..!!
இதற்காக லாஜிஸ்டிக்ஸ், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் இந்தியா-யுரேஷியன் பொருளாதார ஒன்றியம் (EAEU) இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என லாவ்ரோவ் தெரிவித்தார்.
மேலும், பல்முனை உலக ஒழுங்கில் இந்தியா ஒரு முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார மையமாகவும், தனித்துவமான நாகரிகமாகவும், 21ம் நூற்றாண்டின் வல்லரசாகவும் வளர்ந்து வருவதாக லாவ்ரோவ் பாராட்டினார். “இந்தியா தனது தேசிய நலனை முன்னிறுத்தி சுயாதீன வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதால், உலக அளவில் அதன் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா ஆழ்ந்த மரியாதைக்குரியது” என்று அவர் கூறினார்.
இந்தியா தனது உத்தியோகபூர்வமான வெளியுறவுக் கொள்கையில் உறுதியாக இருப்பதை ரஷ்யா வரவேற்பதாகவும், இரு நாடுகளும் சர்வதேச அரங்கில் நெருக்கமாக ஒத்துழைப்பதாகவும் லாவ்ரோவ் சுட்டிக்காட்டினார். இந்த உறவு உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளின் உறவுகளை இன்னும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய உலக சூழலில் இந்தியா-ரஷ்யா உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் தொடரும்!!! ஏவுகணை திட்டத்தை நசுக்குவோம்!! நெதன்யாகு கோவம்!