600 கிலோ வெள்ளி கொள்ளையில் அதிரடி திருப்பம்... சிக்கியது முக்கிய க்ளூ... அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தனிப்படை...!
சேலம் மாநகர போலீசார் , சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சேலத்தில் நள்ளிரவில் மங்கி குல்லா அணிந்து வந்த மர்ம நபர்கள், தனியார் ஒருவரின் வெள்ளிப்பட்டறையில் காவலாளியை தாக்கி விட்டு, 600 கிலோ வெள்ளி கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் , புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிப்பட்றையில் காவலாளியை தாக்கி விட்டு 600 கிலோ வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாநகர் மத்திய பேருந்து நிலையம் அருகே பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட சின்னேரி வயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (58). இவர் கடந்த 20வது ஆண்டுகளாக வெள்ளிப்பட்டறை தொழில் செய்து வருகிறார். தனது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வீட்டின் அருகே பெரிய அளவில் வெள்ளி கொலுசு உற்பத்தி பட்டறையும் நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 9 ஆண்டுகள் தலைமறைவு! சிக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை!
ஆர்டரின் பெயரில் வெள்ளி கொலுசுகள், வெள்ளி செயின்கள் உள்ளிட்ட வெள்ளிப்பொருட்கள் செய்து வெளி மாநிலங்களில் விற்பனைக்கு அனுப்பி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வெள்ளி பட்டறையில் வேலை செய்து விட்டு , இரவு மூடிவிட்டு வீட்டிற்கு திரும்பினார்.
வெள்ளிப்பட்டறையின் காவலாளியாக வெங்கடேசன் (60) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்து வந்தார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் வெள்ளிப்பட்டறைக்கு 4 பேர் மங்கி குல்லா அணிந்து வந்து, அங்கிருந்த காவலாளி வெங்கடேசனை சத்தம் போடக்கூடாது எனக்கூறி மிரட்டி , இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் வெள்ளிப்பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே அழைந்த கொள்ளயர்கள் , அங்கிருந்த வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட வெள்ளிப் பொருட்களை மூட்டைக்கட்டிக் கொண்டு சென்றனர். இதுகுறித்து காவலாளி உடனடியாக வெள்ளிப்பட்டறை உரிமையாளரான பாலசுப்பிரமணி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட 600 கிலோ வெள்ளிப் பொருட்களை மரமநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. மேலும், கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த வெங்கடேசனை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் , மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 600 கிலோ வெள்ளிப்பொருட்களின் மதிப்பு சுமார் 15 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுசம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாநகர காவல் ஆணையர் பாபு, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மங்கி குள்ள அணிந்து கொண்டு வந்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளார்.
மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மறுமணம் அவர்கள் மங்கி குல்லா அணிந்து கொண்டு, பேண்ட் டி-சர்ட் அணிந்து வந்துள்ளனர். மேலும் , பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி வெங்கடேசனை சத்தம் போடக்கூடாது என மிரட்டி இரும்பு கம்பியை கொண்டு தாக்கியுள்ளனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. எனவே காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இதையும் படிங்க: சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!