பிரபல கோயிலில் வசூல் வேட்டையாடிய தவெக நிர்வாகிகள்... போலி ரசீது அடித்து பணம் வசூலித்தது அம்பலம்...!
ஆடி திருவிழாவை யொட்டி கோவில் பகுதிகளில் கடைகள் வைக்கும் சிறு வியாபாரிகளிடம் நாள் ஒன்றிற்கு லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்யும் தவெகவினர்
இந்து சமய அறநிலைத் துறை உதவியோடு நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட கடைகளில் ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்வதாக சிறு வியாபாரிகள் குமுறல். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் , குகை மாரியம்மன் உள்ளிட்ட மாரியம்மன் கோவில்களில் சுமார் 20 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். குறிப்பாக குகை ஸ்ரீ மாரியம்மன் , காளியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெறும் தீமிதிக்கும் நிகழ்வு , வண்டி வேடிக்கை என்னும் வினோத நிகழ்ச்சியும் தமிழகத்தில் எங்கும் காணாத வித்தியாசமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
தலைமுறை தலைமுறையாக சுமார் 75 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண தமிழகத்தின் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளுக்கு சென்றவர்களும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து இந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பர்.
இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரளுவதால் குகை கோவிலை சுற்றியும் , திருச்சி பிரதான சாலையிலும் ஏராளமான திடீர் சாலை ஓர கடைகள் அமைக்கபடும். சிறு வியாபாரிகள் பொம்மை , பலூன் , விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை கட்டில் கடைகளாக வைத்து விற்பனை செய்பவர். ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்கள் வரை இந்த கடைகள் இருக்கும். இந்த கடைகளுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் டெண்டர் விடப்பட்டு முறையாக பணம் வசூல் செய்யப்படும்.
ஆனால் இந்த ஆண்டு முறையான டெண்டர் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை சாதகமாக எடுத்துக் கொண்ட தவெக வினர் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்களின் துணையோடு சாலையோர கடைகளில் லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து வருகின்றனர்.
தவெக குகை பகுதி செயலாளர் பாலாஜி தலைமையிலான குழுவினர், அந்தப் பகுதியில் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய கடைளுக்கு ஐநூறு ரூபாய் முதல் ஐந்தாயிரம் வரை தின வாடகை அடிப்படையில் தினந்தோறும் வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நஞ்சற்ற விவசாயம்... உலக சந்தையை குறிவைக்கும் தமிழக அரசு..! பட்ஜெட் அறிவிப்புகள்..!!
இது குறித்து சாலையோர வியாபாரிகள் கூறும்பொழுது கடந்த காலங்களில் இது போன்ற நிலை இல்லை என்றும், அப்போதெல்லாம் வெறும் 100 ரூபாய் கொடுத்தால் போதும் , ஆனால் தற்போது கூடுதலாக அதிக அளவில் வசூல் செய்வதாகவும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் மிரட்டி தங்களிடம் பணத்தை வாங்கிச் செல்வதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்..
இதையும் படிங்க: வார்த்தையை விட்ட வேளாண் துறை அமைச்சர்... எழுந்து நின்று ஆக்ரோஷமாக கத்திய திமுக எம்.எல்.ஏ.க்கள்...!