×
 

செங்கோட்டையன் படத்தோட போஸ்டர் ஒட்டுனது குத்தமா?... தவெக இளைஞரை பொளந்தெடுத்த விஜயின் விழுதுகள்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!

வெக அஸ்தம்பட்டி பகுதி இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலு, செங்கோட்டையன் படத்துடன் சுவரொட்டி ஓட்ட கூடாது என்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

செங்கோட்டையன் படத்துடன் சுவரொட்டி ஒட்டிய  தவெகவினரை அக்கட்சியை சேர்ந்தவர்களே கடுமையாக தாக்கியதில் ஒருவர் படுகாயம்; தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் பகுதி செயலாளர் மீது தவெகவினர் காவல் நிலையத்தில் புகார்

 நடிகர் விஜய், நிர்வாகிகள் சந்திப்பு என்ற பெயரில் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதற்காக அக்கட்சியினர் விதிமுறைகளை மீறி ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்களும் சுவரொட்டிகளும் ஒட்டி வருகின்றனர்.

 அதன்படி சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் அந்த பகுதியைச் சேர்ந்த  தவெக-வினர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம் ஆகியோரின் படத்துடன் கூடிய சுவரொட்டிகளை இரவில் ஒட்டி வந்த போது, அங்கு வந்த தவெக அஸ்தம்பட்டி பகுதி இளைஞர் அணி இணைச் செயலாளர் பாலு, செங்கோட்டையன் படத்துடன் சுவரொட்டி ஓட்ட கூடாது என்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதையும் படிங்க: சேலம் TVK பிரச்சாரத்தில் உற்சாகம்.. சாட்டையை சுழற்றிய விஜய்... தொண்டர்கள் செம்ம குஷி..!

 மேலும்  இளைஞர் அணி இணை செயலாளர் பாலு,  சுவரொட்டி ஒட்டிய இளைஞர்களை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயாம் அடைந்த இளைஞர் பாரதி என்பவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 செங்கோட்டையன் படத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டியதற்கு அக்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்திய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ஸ்டாலின் ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல்…! அவ்ளோதான் கதம் கதம்.. பொளந்து கட்டிய விஜய்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share