×
 

பாலன் இல்லத்தில் கலவரத்தை தூண்ட வந்தாரா சனம் ஷெட்டி?... போராட்ட களத்தில் இருந்து வந்த பகீர் தகவல்...!

சனம் ஷெட்டி பாலன் இல்லத்தில் நடந்த போராட்டத்தில் கலவரத்தை தூண்டுவதற்காக வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் இளைஞர்கள், மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வியாழக்கிழமை வெளியானது. முதலமைச்சர் விஜய், தவெக அமைச்சர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை ஜனநாயகன் பார்த்து கொண்டாடி வருவது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. இதற்கிடையே, மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகை சனம் ஷெட்டி வெள்ளிக்கிழமை இரவு, மாணவர்களின் போராட்டத்தில் பங்கேற்று இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரித்தார்.

அப்போது பேசிய சனம் ஷெட்டி, “இந்த போராட்டத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்துவதில் எனக்கு உடன்பாடியில்லை. இந்த மேடையை அரசியல் ரீதியாக பயன்படுத்துபவர்கள் தான் ஜோக்கர்கள். நாங்கள் கிடையாது. நான் விஜய்யின் தீவிர ரசிகை. நேற்று நான் 'ஜனநாயகன்' படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்." என்றார். உடனே போராட்டக்காரர்கள் அவரது மைக்கை பிடிங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு நடுரோட்டில் சரமாரி கத்திக்குத்து... தாயின் செயலால் மகளுக்கு நேர்ந்த பயங்கரம்... பகீர் பின்னணி..!

இதனையடுத்து ஆவேசமாக அங்கிருந்து கிளம்பிய சனம் ஷெட்டி, "ஒரு நாள் ஒரு திரைப்படத்தை பார்த்ததற்காக என்னை 'ஜோக்கர்' என்று அழைக்கிறார்கள். அப்படியானால் இங்கே அமர்ந்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பல திரைப்படங்களை எடுத்திருக்கிறார். அவரையும் 'ஜோக்கர்' என்று அழைப்பீர்களா?. 

நான் மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கைப் பறித்துக்கொண்டார்கள். இதுதானா ஜனநாயகம்? ஜனநாயகத்திற்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு, ஒருவருக்குப் பேசும் உரிமையையே மறுக்கிறார்கள். இன்று இங்கு நடந்த போராட்டம் மட்டும் போலியானது. என் கையிலிருந்த மைக்கைப் பறித்துவிட்டார்கள். அதுவே அவர்கள் ஜனநாயகத்தை எப்படி மதிக்கிறார்கள் என்பதற்குச் சான்று என ஆவேசமாக பேட்டியளித்தார். 

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பி வரும் நிலையில், சனம் ஷெட்டி பாலன் இல்லத்தில் நடந்த போராட்டத்தில் கலவரத்தை தூண்டுவதற்காக வந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 

இதையும் படிங்க: விடிந்ததுமே சென்னை மக்களுக்கு குட்நியூஸ்... மெட்ரோ ரயில் சேவையில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share