×
 

"கஜானா காலி"..! இது உங்க கவர்மென்ட்..!தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர்கள் நம்பிக்கை..!

போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னை ரிப்பன் மாளிகை வெளியே ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் என்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், ராஜ்மோகன், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஆனந்த், முதல்வர் விஜய் உங்களுக்கு நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கையில் சிரித்த முகத்துடன் அமைச்சர்களை வரவேற்று இருக்கிறீர்கள் என்றும் பல ஆண்டுகளாக போராடியும் யாரும் கேட்காத நிலையில் தற்போதைய முதல்வர் மக்கள் முதல்வராக செயல்படுவார் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார். பழைய ஆட்கள் கஜானாவை காலி செய்துள்ள நிலையில் மக்கள் வரிப்பணத்தை கஜானாவில் சேர்த்து கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்ற உறுதியளித்தார்.

மேலும் சிரித்த முகத்தோடு அமைச்சர்களாகிய எங்களை வரவேற்ற தூய்மை பணியாளர்களுக்கான அனைத்தையும் செய்வோம் என்றும் அமைச்சர் ஆனந்த் உறுதி அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர்கள் நிர்மல் குமார், எதற்கும் நீங்கள் கவலைப்படவோ கஷ்டப்படவோ வேண்டாம் என்றும் உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். இது உங்க கவர்மெண்ட் என்றும் நாங்கள் வேறு யாரும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்றுடன் என்டு கார்டு?... தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை முடிக்க களமிறங்கும் தவெக அமைச்சர்கள்...!

தூய்மை பணியாளர்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்யப் போகிறோம் என்றும் கேட்டார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், இது தூய்மை பணியாளர்களின் போராட்டம் போல் அல்ல என்றும் மாநாடு போல் உள்ளது எனவும் தெரிவித்தார். 15 நாட்களாக யாருக்கும் இடையூறின்றி ராணுவ ஒழுக்கத்துடன் தூய்மை பணியாளர்கள் போராடினார்கள் என்றும் அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறினார். 

இதையும் படிங்க: வலுக்கும் போராட்டம்... தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share