×
 

பழிக்குப்பழி... ராமதாஸ், சசிகலாவின் புது அரசியல் வியூகம்... மண்ணைக் கவ்வப்போகும் NDA கூட்டணி...!!

ராமதாஸ் - சசிகலா கூட்டணி வெற்றி பெறாவிட்டாலும் கூட போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தது 5 ஆயிரம் வாக்குகளையாவது பிரிக்கக்கூடும்.

அதிமுக கூட்டணியில் பாமக + அமமுக இருந்தாலும் கூட வன்னியர் மற்றும் தேவர்களின் வாக்குகள் முழுவதுமாக கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. ஓ.பி.எஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை திட்டமிட்டே எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு விரட்டிவிட்டார் என்ற கோபத்தில் முக்குலத்தோர் இருந்து வருகின்றனர். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் என்.டி.ஏ.கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றால், முக்குலத்தோர் வாக்குகள் மிகவும் முக்கியமானது. இதைச் சொல்லித்தான் டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸை மீண்டும் அதிமுகவுக்குள்ளோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணிக்குள்ளோ கொண்டு வர பாஜக போராடியது. 

ஆனால் வி.கே.சசிகலா மற்றும் ஓ.பி.எஸை எக்காரணம் கொண்டும் கட்சிக்குள் கொண்டு வர இபிஎஸ் சம்மாதிக்கவில்லை. ஆனால் அமமுக என்ற கட்சியுடன் கூட்டணி என்ற பெயரில் டிடிவி தினகரன் மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தஞ்சம் புகுந்துவிட்டார். இன்னொருபுறம் தேர்தலில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கக்கூடிய மிகப்பெரிய சக்தியாக வட மாவட்டங்கள் உள்ளன. அதனை வன்னியர்களின் ஓட்டுகள் தான் தீர்மானிக்கின்றன. வடமாவட்டங்களைப் வன்னியர்கள் அதிகம் உள்ளதால் தான் ஒன்றிணைந்த பாமக கூட்டணியை எப்படியாவது இறுதி செய்து விட வேண்டும் என அப்பா ராமதாஸிடம் பாஜகவும், மகன் அன்புமணியிடம் அதிமுகவும் சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தன. பல கட்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததையடுத்து அன்புமணி பாமக மட்டும் கூட்டணியில் இணைந்தது. இதனால் வன்னியர்களின் முழு ஓட்டுக்களும் என்.டி.ஏ.கூட்டணிக்கு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

ஏனெனில் ராமதாஸும், சசிகலாவும் இணைந்து தனி கூட்டணி அமைத்துள்ளனர். ராமதாஸ் - சசிகலா கூட்டணி வெற்றி பெறாவிட்டாலும் கூட போட்டியிடும் தொகுதிகளில் குறைந்தது 5 ஆயிரம் வாக்குகளையாவது பிரிக்கக்கூடும். அது திமுகவிற்கு அல்ல அதிமுக கூட்டணிக்கு தான் பின்னடைவாக அமையும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் திமுக பலமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில், சசிகலா நிறுத்தும் வேட்பாளர்கள் அதிமுகவிற்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரிக்கும் சக்தியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: NDA கூட்டணி ஆட்சி கன்பார்ம்... சூரியனை வைத்து இரட்டை இலையை பொசுக்கிய தமிழிசை... !

அதேபோல் தென்மாவட்டங்களை எடுத்து கொண்டால் முக்குலத்தோரில் முக்கிய தலைவராக இருக்கும் ஓ பன்னீர் செல்வம் திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். இவரை வைத்து தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை பெற திமுக திட்டமிட்டு களப்பணியில் இறக்கி உள்ளது. இது இந்த கூட்டணிக்கு மதுரை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டுகளில் பிரச்சனையை ஏற்படுத்தலாம் எனக்கூறப்படுகிறது. இதனால் இந்தமுறை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரசாகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இதையும் படிங்க: EPS தான் முதலமைச்சர்... வலுவான கூட்டணி..! அடித்துச் சொல்லும் அண்ணாமலை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share