×
 

அதிமுகவை மீட்பதே இலக்கு! கள்ளக்குறிச்சியில் சசிகலா இன்று ஆலோசனை; எடப்பாடிக்கு எதிராக புதிய வியூகம்!

அதிமுகவை ஒருங்கிணைத்து மீட்கப்போவதாகக் கூறி வரும் சசிகலா, இன்று கள்ளக்குறிச்சியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவில் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்காகச் சசிகலா இன்று தனது ஆதரவாளர்களுடன் மிக முக்கியமான ஆலோசனையை நடத்துகிறார். கள்ளக்குறிச்சி அரசூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாட்டை அவர் அறிவிக்க உள்ளார்.

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுகவில் நிலவி வரும் தலைமைப் போட்டி மற்றும் உட்கட்சிப் பூசல்கள் புதிய திருப்பத்தை எட்டியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சசிகலாவிற்கு அதிமுகவில் இடமே இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசூரில் தனது ஆதரவாளர்களுடன் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார்.

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகச் சசிகலா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். "யார் தடுத்தாலும் அதிமுகவை மீட்பேன்; இது தொண்டர்களுக்கான கட்சி" என்று அவர் முழங்கி வரும் நிலையில், இன்றைய அரசூர் கூட்டம் அவரது அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலைச் சந்திக்கப் புதிய வியூகங்கள் வகுக்கப்பட உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான தற்போதைய அதிமுகவிற்கு எதிராகத் தனது பலத்தைக் காட்ட சசிகலா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஒரே மேடையில் மோடி - இபிஎஸ்!  மதுராந்தகத்தில் என்.டி.ஏ கூட்டணி அறிவிப்பு? நயினார் நாகேந்திரன் அதிரடி!!

இந்தக் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரின் ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. "2026 தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அதில் அதிமுகவின் பங்கு மிக முக்கியமானது. அந்தப் பங்கை உறுதி செய்யத் தகுதியான தலைமை அவசியம்" என்பதைச் சசிகலா இன்று வலியுறுத்த உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் அவரது ஆதரவாளர்கள் அரசூரில் குவியத் தொடங்கியுள்ளதால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில், சசிகலாவின் இந்த முடிவு அதிமுக அரசியலில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

இதையும் படிங்க: எடப்பாடி ஒரு காபி பேஸ்ட் எக்ஸ்பர்ட்! எடப்பாடியின் ரூ.2000 அறிவிப்பை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share