×
 

அமைச்சர்களை ஜெயிக்க வைக்க டீலிங்... அதிமுக தொகுதி ஒதுக்கீட்டை விமர்சித்த சீமான்..!!

சேலத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை தீவிரப்படுத்தி வருகிறார். கட்சி தனித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடும் முடிவை உறுதி செய்துள்ளது. இதற்காக, பிப்ரவரி 21 அன்று திருச்சி அருகே ஆலம்பட்டிப்புதூரில் நடைபெற்ற 'மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு' என்ற மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதில் 117 ஆண்கள், 117 பெண்கள் என சம அளவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சீமான் தானே சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். 

தற்போது, 234 தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து சீமான் பிரச்சாரம் நடத்தி வருகிறார். திருத்தணியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய சீமான் ஒவ்வொரு தொகுதியிலும்  நாம் தமிழர் கட்சியை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

மேட்டூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிறகு, சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. திமுக அமைச்சர்களின் தொகுதிகளை பாஜகவிற்கு அதிமுக ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தார். பாஜக வரக்கூடாது எனக்கூறி திமுகவினர் பிரச்சாரம் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கருணாநிதிக்கு காங்கிரசால் அழுத்தம்... பரப்புரையில் சீமான் பகிரங்க குற்றச்சாட்டு..!

அமைச்சர்களின் தொகுதிகளை திமுகவிற்கு ஒதுக்கியது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று கூறியுள்ளார். அமைச்சர்களை வெற்றி பெற வைப்பதற்காக டீலிங் நடந்திருப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எந்த அடிப்படையில் காங்கிரசை புனிதப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: பெற்றோர்களை பராமரிக்காத மகன்களுக்கு ரேசன், கேஸ், மின் இணைப்பு ரத்து... ஒரே போடாய் போட்ட சீமான்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share