#BREAKING: சீமான் மீது டிஐஜி வருண் தொடர்ந்த அவதூறு வழக்கு.. இடைக்கால தடை விதிப்பு.. கோர்ட் தடாலடி!
சீமானுக்கு எதிராக டிஐஜி வரும் குமார் தொடர்ந்து அவதூறு வழக்கில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீமானின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் காவல்துறையுடனான மோதல்களின் ஒரு பகுதியாக டிஜி வரும் குமார் உடனான கருத்து மோதல் கருதப்படுகிறது. சீமான், திமுக அரசையும், காவல்துறையையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார். வருண் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தபோது, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாகக் குற்றம்சாட்டினார். குறிப்பாக, சீமான் சென்னை எழும்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வருண் குமார் குறித்து அவதூறாகப் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
வருண் குமார், சீமானின் குற்றச்சாட்டுகள் தனது பதவி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பாதித்ததாகக் கூறி, சட்டரீதியாக எதிர்கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து, வருண் குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், சீமானின் பேச்சு தனக்கும் குடும்பத்திற்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு இருந்தார்.
இதற்கு பதிலடியாக வருண் குமார் தன்னை மைக் புலிகேசி என்று அவமதித்ததாகவும், இந்த வழக்கு தனக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதற்காக தொடரப்பட்டதாகவும் சீமான் கூறினார். 2015-ல் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் வருண் குமார் 20 நாட்கள் சிறையில் இருந்ததாகவும், அவருக்கு நற்பெயர் இல்லை என்றும் சீமான் தரப்பு வாதிட்டது.
இருப்பினும், சீமான் தரப்போ மாதங்கள் உகந்ததாக இல்லை எனக் கூறிய நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத சீமானுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து ஏப்ரல் எட்டாம் தேதி நடந்த வழக்கின் விசாரணையில் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்தார். தொடர்ந்து, ஜூலை ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்றம் அறிவித்தது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அருண் குமார் தொடர் த அவதூறு வழக்கிற்கு இடைகால தடை விதிக்கப்பட்டுள்ளது.