சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள்? சீமான் கொடுத்தால் எதிர்க்கிறீர்கள்?... பஞ்ச் டைலாக் பேசி பட்டையைக் கிளப்பிய சீமான்...!
திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒழிக்க வேண்டும், நமது உரிமைகளை எல்லாம் பறித்தவர்கள்
புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் இன்னும் சற்று நேரத்தில் புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழ்நாடு மக்களுக்கு நிலவும் பிரச்சனைக்கு திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக ஆகிய நான்கு கட்சிகள் தான் காரணம். பெண்மையைப் போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது. என் மனைவியை துணை வேட்பாளராக குறிப்பிட்டதற்கு கேள்வி எழுப்பினர். என் உயிர் துணை வாழ்க்கை துணை வாக்கு அரசியலில் துணை என்று கூறினேன்.
சிவன் கொடுத்தால் ஏற்கிறீர்கள் சீமான் கொடுத்தால் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்டேன். பெண்களுக்கு சரி பங்கு கொடுக்காத எவனும் சிவனை கும்பிடக் கூடாது,கும்பிட அருகதை அற்றவன். திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒழிக்க வேண்டும், நமது உரிமைகளை எல்லாம் பறித்தவர்கள் ஒன்றிய பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர். உரிமைகளையெல்லாம் பறிகொடுத்தவர்கள் தான் அவர்கள் அதிமுக திமுகவினர்.
இதையும் படிங்க: இலவச பிரிட்ஜ்-ல குடுக்குறவங்க கை, கால்களை வெட்டி வைப்பதா..? சீமான் சரமாரி கேள்வி..!
சாமியை காப்பாற்ற சிலர் கும்பிடுகின்றனர், நான் இந்த பூமியை காப்பாத்த போராடி வருகிறேன். கும்பிட ஆயிரம் சாமிகள் உள்ளது,வாழ ஒரு பூமி தான் உள்ளது,
இந்த பூமியை காப்பாத்த மக்கள் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நாங்கள் சொல்வதுதான் உண்மையான மாற்று, சோறு தருவதை மற்றும் மக்கள் சிந்திக்காமல் கார் தருவதை பற்றி யோசிக்கின்றனர் என்றார்.
இதையும் படிங்க: பயந்து போய் இரண்டு தொகுதியில நிக்குறேனா.? விஜயை வம்பிழுத்த சீமான்..!!