கட்சி கொடியில் குழப்பம் வரும்... நாதக-வை விஜய் பின்பற்றுவதில் மகிழ்ச்சி... சீமான் சுவாரஸ்ய தகவல்!!
நாதக கொடியும், தவெக கொடியும் ஒன்றுபோல் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜயுடன் இணைந்து பணியாற்றுவது கடினம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்களுக்கு யாரும் போட்டி கிடையாது. இதுவரை நாதக ஒருமுறையும் கூட்டணி அமைத்ததே இல்லை. நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மக்கள், எங்களுடன் தான் நிற்பார்கள். எங்களால் சமரசம் செய்து கூட்டணி அமைத்து தேர்தல் வெற்றியை அனுபவிக்க முடியாது.
என்னால் வாக்குக்கு பணம் கொடுக்க முடியாது. நாங்கள் அப்படியல்ல. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் களத்தில் இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். தம்பி விஜய் முதல்வர் வேட்பாளர் என்றால், அதற்காகதானே கட்சியை தொடங்கி இருக்கிறார். அதனைதானே கட்சி முடிவாக அறிவிக்கும். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. என்னுடைய கட்சி கொடிக்கும், அவர்களின் கொடிக்கும் குழப்பம் வரும்.
இதையும் படிங்க: கடலூர் ரயில் விபத்து; குழந்தைகள் உயிரிழப்புக்கு இதுவே முதன்மை காரணம்... சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு!!
இருந்தாலும் நம்மை பின்பற்றி விஜய் வருவது பெருமையும், மகிழ்ச்சிதான். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை விஜய் பேசுவது மகிழ்ச்சி தான். எங்களுடைய அரசியல் பெரியார் இல்லாதது. ஆனால் தவெகவின் கொள்கைத் தலைவராக பெரியார் இருக்கிறார். அதனை எங்களால் ஏற்க முடியாது.
அதனால் விஜயுடன் இணைந்து பணியாற்றுவது கடினம். விஜய் மொழி, இனம் அரசியல் குறித்து பேச முன் வரவில்லை. ஜல்லிக்கட்டுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? மக்கள் பணத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்து கொண்டே போகிறார்கள்.. கீழடியில் 2 ஏக்கர் தான் ஒரு இனக்குழு வாழ்ந்திருக்கிறதா? மீதமுள்ள பகுதிகளில் ஏன் தோண்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: எந்த கொள்கையில் பெரியாரை ஏற்கிறீர்கள்? தமிழை சனியன் என்றதை ஏற்கிறார்களா? சீமான் சரமாரி கேள்வி!!