என்ன மக்களே ரெடியா? காரைக்குடியில் சீமான் பேட்டி? வெளியான முக்கிய தகவல்..!!
2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளராக நிற்க உள்ளார் என்ற தகவல் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சிக்கும் காரைக்குடிக்கும் இடையே உள்ள உறவு மிகவும் நெருக்கமானது. சீமான் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், இப்பகுதி மக்களிடையே அவருக்கு தனிப்பட்ட அடையாளமும், ஆதரவும் உள்ளது.
சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியைத் தேர்ந்தெடுத்து களமிறங்கினால் அவருக்கு இருக்கும் ஆதரவின் பலத்தைக் காட்ட ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை அவர் 2016-ல் கடலூரிலும், 2021-ல் திருவொற்றியூரிலும் போட்டியிட்டிருந்தாலும், இம்முறை சொந்த ஊருக்கு அருகில் உள்ள தொகுதியில் களமிறங்குவது முதல் முறை என்பதால் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சிக்கு எப்போதுமே ஒரு வலுவான அடித்தளமாக இருந்து வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என்.துரை மாணிக்கம் சார்பில் போட்டியிட்டபோது சுமார் 11.24% வாக்குகளைப் பெற்றார். இது அக்கட்சிக்கு தொகுதியில் கணிசமான ஆதரவு இருப்பதை காட்டுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சுமார் 16-17% வரை வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: ஒரே மேடையில் 234 தொகுதி வேட்பாளர்கள்... திருச்சியில் சீமானின் பிரம்மாண்ட மாநாடு...!
இது காரைக்குடி போன்ற தொகுதிகளில் கட்சியின் செல்வாக்கு வளர்ந்து வருவதற்கு சான்றாக உள்ளது. காரைக்குடி போன்ற தொகுதிகளில் கட்சி வளர்ச்சி தெளிவாகத் தெரிகிறது. இம்முறை சீமான் நேரடியாக களமிறங்குவார் என கூறப்படுவதால், கட்சியின் பிரசாரம் மிகவும் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: டைம் பாஸுக்கு கட்சி நடத்துறாரு சீமான்...! அதெல்லாம் கண்டுக்காதீங்க... தவெக நிர்மல் குமார் தாக்கு..!!