முப்பாட்டன் முருகன் துணையிருக்கு!! தேதி குறிச்சாச்சு! திருத்தணியில் பிரசாரத்தை துவங்கும் சீமான்!! சூடுபிடிக்கும் களம்!
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மார்ச் 23-ல் திருத்தணி முருகன் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு தனது பிரசாரத்தை துவங்குகிறார்.
சென்னை: வரும் தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது.
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று முன்தினம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். “செயற்பாட்டு வரைவு” என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், இலவசங்கள், கவர்ச்சி வாக்குறுதிகள் ஏதும் இல்லாத வகையில், நீண்டகால திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
அனைவருக்கும் அரசு வேலை வழங்குதல், தமிழகத்தை 5 தலைநகரங்களாக மாற்றுதல் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நடைமுறைக்கு ஏற்ற திட்டங்களை முன்வைத்துள்ளதாக கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாதக சட்டசபைக்குள்ள போறது உறுதி! ஸ்கெட்ச் போட்டு தந்த சீமான்! தேர்தல் பணியில் மும்முரம்!
இந்நிலையில், சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை சீமான் மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறார். திருத்தணியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கும் சீமான், முதலில் திருத்தணி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துவிட்டு, பின்னர் பிரசாரப் பணியைத் தொடங்குவார்.
மார்ச் 23 முதல் மார்ச் 28 வரை முதல் கட்ட பிரசாரத்தை சீமான் மேற்கொள்ளவுள்ளார். இந்தக் காலகட்டத்தில் பல மாவட்டங்களில் அவர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, கட்சியின் கொள்கைகளையும், தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களையும் மக்களிடம் எடுத்துரைக்கவுள்ளார்.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவு, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் உத்தியில் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இலவச வாக்குறுதிகள் இல்லாத தேர்தல் அறிக்கை மற்றும் சீமானின் தீவிர பிரசாரம் ஆகியவை தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
தேர்தல் நெருங்கும் நிலையில், சீமானின் பிரசாரப் பயணம் தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!