×
 

சாதிப் பெயரை நீக்க சொல்லிட்டு ஜி.டி. நாயுடு பெயரில் சாலை... இதான் திராவிட மாடலா? சீமான் சரமாரி கேள்வி...!

கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு தீரன் சின்னமலை பெயரைச் சூட்ட வேண்டும் என சீமான் வலியுறுத்தினார்.

கோவையில் புதிதாக 1791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவினாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். 

இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு தீரன் சின்னமலை பெயரை வைத்திருக்கலாமே என தெரிவித்தார். அவர் பாதம் பட்ட மண்ணில் கட்டப்பட்ட மேம்பாலத்திற்கு அவருடைய பெயரைச்சூட்டி நாங்கள் நடமாடக்கூடாதா என சீமான் கேள்வி எழுப்பினார்.

 கொடி காத்த குமரன் பெயரை பெயரை வைத்திருக்கலாமே என்றும் வ.உ. சிதம்பரனார், மொழிப்போர் மறவர் பல்லடம் பொன்னுசாமி, காலிங்கராயன், பொன்னர் ஆகியோர் பெயரை வைத்திருக்கலாமே என சீமான் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!

இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஜி.டி.நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன என்றும் ஜி.டி.நாயுடுவை இந்தியாவின் எடிசன் என்று எப்படி கூறுகிறீர்கள் என்றும் கேட்டுள்ள சீமான், எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது., எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத்திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள், ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன் என சாடினார்.

சாதிப்பெயர் நீக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க சொல்லிவிட்டு ஜி.டி. நாயுடு பெயரை வைப்பதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா என கூறினார்.

இதையும் படிங்க: பரப்புரையை விடுங்க... இத செய்ங்க தம்பி! விஜய்க்கு சீமான் அறிவுரை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share