சிபிஐ அதிகாரிகளுக்கு என்ன ரெண்டு மூளையா? சீமான் அடுக்கடுக்கான கேள்வி...!
சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூளை இருக்கிறதா என சீமான் கேள்வி எழுப்பினார்.
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், தாங்கள் எப்போதும் சிபிஐ விசாரணையை ஆதரிக்க மாட்டோம் என தெரிவித்தார். மேலும் சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூளை இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர்படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க கூடாது என்றும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிபிஐ விசாரணை என்பது மாநில தன்னாட்சிக்கு எதிரானது., அது ஆட்சியாளர்களின் கைவிரல்களாக நீட்டினால் நீளும், மடக்கினால் மடங்கும் என்று அவர் அடிக்கடி வலியுறுத்துவது சீமான் நிலைப்பாடான சிபிஐ விசாரணை எதிர்ப்பு நிலைப்பாட்டின் சாரமாக உள்ளது. இது, தமிழக காவல்துறையின் சிபிசிஐடி போன்ற உள்ளூர் அமைப்புகளை நம்ப வேண்டும் எனும் கோரிக்கையுடன் இணைந்துள்ளது.
சீமானின் பார்வையில், சிபிஐ விசாரணைகள் பெரும்பாலும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுவதாக அமைகிறது. இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்தார். சிபிஐ அதிகாரிகளுக்கு இரண்டு மூளை இருக்கிறதா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: கரூர் சம்பவத்தில் சீமான் பதற்றப்படுவது ஏன்? அண்ணாமலை சரமாரி கேள்வி…!
CBI விசாரணையை நாங்கள் எப்போதும் ஏற்பதில்லை என்று கூறிய சீமான், எங்கள் காவல்துறை விசாரணையில் என்ன குறை இருக்கிறது எனக் கேட்டுள்ளார். இத்தனை ஆண்டுகளில் சிபிஐ விசாரித்து நிரூபித்த பெரிய வழக்கு எதாவது இருக்கிறதா என்றும் கேட்டு உள்ளார்.
இதையும் படிங்க: பூசணி தோட்டத்தையே சோத்துல மறைக்கப் பாக்குறாங்க… திமுகவை விளாசிய அதிமுக எம்.பி…!