×
 

“நீங்க முதலமைச்சர் ஆகலைன்னா...” - சி.எம். விஜயை நோக்கி ‘நறுக்’ பாயிண்டுகளை அடுக்கிய சீமான்...!

தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒன்றாக நின்றால், நம் வாழ்வு பொன்னாகும். இல்லையா, அண்ணா?

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராக சென்னையில் பல்வேறு கட்சிகள் பங்கேற்ற போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 840 பேரை, 850 பேரை இன்னொரு நாட்டு ராணுவம் சுட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அரசு வேலை கொடுத்திருக்கிறீர்களா? சொல்லுங்கள், கொடுத்திருக்கிறீர்களா?

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மகாமகத்தில் குளிக்கச் சென்றபோது 48 பேர் உயிரிழந்தார்கள். அவர்களுக்கு அரசு வேலை கொடுத்தீர்களா?

இங்கு இந்திய ராணுவம் வந்து விண்வெளியில் சாகசம் நடத்தும்போது, கடற்கரையில் 15 பேர் நசுங்கி உயிரிழந்தார்கள். அவர்களுக்கு அரசு வேலை கொடுத்தீர்களா? கொடுத்தீர்களா?

இதையும் படிங்க: நக்கீரன் கோபாலுக்கு சட்ட சிக்கல்..! பாசிச வெறியாட்டம்... பந்தாடிய சீமான்..!!

நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்திற்குச் சென்று உயிரிழக்கிறார்களே, அவர்களுடைய குடும்பத்தினருக்கு அரசு வேலை கொடுத்தீர்களா? கொடுக்கவில்லை.

நீங்கள் வாச்சாத்தியில் இதே ஐயா செங்கோட்டை அமைச்சராக இருக்கும்போது, எத்தனை குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்களை வன்புணர்வு செய்து, கொலை செய்து தூக்கிப் போட்டீர்கள்? அவர்களுக்கு ஏதாவது அரசு வேலை கொடுத்தீர்களா?

உங்களைப் பார்க்க வந்து உயிரிழந்தால் அரசு வேலை என்றால், நீங்கள் முதலமைச்சராக இல்லாவிட்டால் யார் கொடுப்பார்கள் அரசு வேலை?

இப்போது நீங்கள் பாதிக்கப்பட்ட ஏழை விதவைப் பெண்களுக்கு ஆடு, மாடு, செம்மறி ஆடு கொடுக்கிறீர்கள். அதுபோல அந்தக் குடும்பங்களுக்கு பத்து ஆடுகளாவது கொடுங்கள்; இரண்டு மாடுகளாவது கொடுங்கள். நாங்கள் வேண்டாம் என்று சொன்னால் கேளுங்கள்.

அதனால், மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் சிக்கலும் சரி, இன்று மேகமலையில் மலையிலிருந்து குடியேற்றம் செய்யப்பட உள்ள 5,000 மக்களின் சிக்கலும் சரி, தீர்க்கப்படும். நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள்.

தமிழர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒன்றாக நின்றால், நம் வாழ்வு பொன்னாகும். இல்லையா, அண்ணா?

இன்றைக்கு தொடங்கியிருக்கின்ற இந்தப் புரட்சிகர அரசியல் பயணம், புதிய ஒரு தமிழகத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு, ஒரு புரட்சிகர அரசியலை முன்னிறுத்தி, எல்லோரும் போராடி, நம் உரிமையை மீட்போம்; காப்போம்.

இதையும் படிங்க: "வெற்றி" இல்ல "வெற்று" அறிக்கை..! ஏமாத்திட்டீங்க CM..! முதல்வர் விஜயை பந்தாடிய சீமான்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share