" விரைவில் அவர்கள் தலை துண்டிக்கப்படும்" - கடலம்மா மாநாட்டில் சீமான் ஆவேசம்...!
தமிழகம் மீனவர்கள் ஒருவர் உயிர் கூட போயிருக்காது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாம் தமிழர் கட்சி மூன்று மடங்கு வெறியுடன் களம் இறங்கும். சென்னை மெரினாவில் சாகசம் செய்த இந்திய ராணுவம் தமிழக கடற்கரையில் சாகசம் செய்திருந்தால் தமிழகம் மீனவர்கள் ஒருவர் உயிர் கூட போயிருக்காது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
நெல்லை மாவட்டம் கூத்தன் குழியில் நாம் தமிழர் கட்சி சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கடலம்மா மாநாடு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாநாட்டில் கடல் மாசு கடலில் நெகிழி குப்பைகளால் ஏற்படும் பிரச்சனை உள்ளிட்டவர்கள் குறித்து காணொளி வெளியிடப்பட்டது.
தொடர்ந்து மாநாட்டில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் தேர்தல் வரும் நேரத்தில் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள்? யார் வெற்றி பெறுவார்கள்? யார் யாருக்கு சீட்டு தருவார்கள்? யார் எவ்வளவு பணம் தருவார்கள்? என அனைவரும் பேசும் வேளையில் கடல் குறித்தும் கடலில் ஏற்படும் பாதிப்பு குறித்தும் நாம் தமிழர் கட்சி மட்டுமே பேசி வருகிறது.
இதையும் படிங்க: நிம்மதி... நாகை மீனவர்கள் 31 பேர் விடுதலை... இலங்கை நீதிமன்றம் வைத்த செக்...!
மரம், மழை, ஆறு, தண்ணீர் போன்றவைக்கு மக்கள் ஓட்டு இல்லை இருப்பினும் அவைகளுக்கு தான் உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்து நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வருகிறது. ஓட்டுக்காக நிற்பவர்கள் இதனை எல்லாம் செய்ய மாட்டார்கள் நாட்டுக்காக இருப்பவர்கள் மட்டுமே இது போன்ற அரசியலை முன்னெடுப்பார்கள்.
கடலம்மா மாநாடு என்பது அறிவு சார்ந்த ஒரு பயணம் ஒவ்வொரு கூட்டத்திலும் இனி காணொளி காட்சி வாயிலாக படம் போட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் புதிய துறைமுகங்கள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது. காட்டுப்பள்ளி என்ற இடத்தில் புதிய துறைமுகம் அமைக்க அதானிக்கு அனுமதி வழங்கி உள்ளது. நாட்டின் வளங்களை ஏற்றுமதி செய்ய அவர்கள் தயாராகி வருகிறார்கள். 611 ஏக்கரில் காட்டுப்பள்ளி என்ற இடத்தில் சேர்க்கை துறைமுகம் அமைக்கப்பட்டால் கடல் அளிக்கப்படும். பல்லாயிரம் டன் மலைகள் உடைத்து கல் எடுக்கப்பட்டு கடல் அடைக்கப்படும் .
தமிழகத்தில் புதிய துறைமுகங்கள் செயல்பட தொடங்கினால் மீனவர்கள் கடல் பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். சாகர்மாலா போன்ற திட்டங்கள் கொண்டு வந்து அதனை முயற்சி செய்து வருகின்றனர். இலங்கை கடற்படையால் இதுவரை 800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கடற்படை இதுவரை என்ன செய்கிறது என்பது தெரியவில்லை?. குஜராத்தில் மீனவர் ஒருவர் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிக்கப்பட்டால் இந்திய ராணுவம் வேகவேகமாக சென்று அவரை மீட்டு வருகிறது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்படும் போது இந்திய ராணுவம் கண்முடி வேடிக்கை பார்க்கிறது. இலங்கையில் தமிழக மீனவர்கள் பிடிக்கப்பட்டு மொட்டை அடித்து விடப்படுவது, இந்திய நாட்டிற்கு அவமானம். இந்திய பிரதமருக்கு அவமானம். தமிழக மக்களின் வாழ்வாதாரமான பல லட்சம் மதிப்பிலான பழகுகள் சிறை பிடித்து வைக்கப்படுகிறது.
சென்னையில் நடந்த விண்வெளி வித்தையை கடலில் காட்டி இருந்தால் சிங்கள ராணுவம் தமிழக மீனவர்கள் ஒருவரை கூட சுட்டி இருக்காது. குரங்கணி தீ விபத்து, ஒக்கி புயல் உயிரிழப்பு போன்ற சம்பவங்களில் இந்திய ராணுவம் எதனையும் செய்யவில்லை. வித்தை காட்ட கூட வரவில்லை. ஏனெனில் உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழர்கள் . தமிழகத்தில் கோஸ்ட் கார்ட் ஒன்று வேஸ்ட் கார்டாக உள்ளது. தமிழகத்தின் நாம் தமிழர் கட்சியின் நெய்தல் படை உருவாக்கப்பட்டு கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, எங்கள் தாய்மார்கள் தாலி அருக்கும் நிலை ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்கள் தலை துண்டிக்கப்படும். இனி மீனவர் ஒருவர் உயிரிழந்தால் சர்வதேச பிரச்சனையாக மாற்றப்படும்.
கடலம்மா மாநாட்டில் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிரிஜா தாமரை பாண்டியன் என்பவரை மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: சுதந்திரமாக மீன்பிடிப்பது எப்போது? பாவமா தெரியலையா... மீனவர்களை மீட்க இபிஎஸ் வலியுறுத்தல்...!