×
 

மீனவர்களை தண்டிக்கும் மத்திய அரசு..! அவ்ளோ அலட்சியம்... செல்வப் பெருந்தகை தாக்கு..!!

மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு 4 நவீன மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்னும் சில நாட்களில் விழா நடத்த வேண்டிய சூழலில் இத்தகைய கைது நடவடிக்கைகள் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்திருக்கிறது என்றார். இந்த கைது சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். 

இன்றைய நிலவரப்படி தமிழகத்தை சேர்ந்த 116 மீனவர்களும், 259 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகிறது என்றும் இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும் கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காவிச் சிந்தனையில் பழனிச்சாமி... வள்ளுவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? கிழித்து தொங்கவிட்ட செல்வப் பெருந்தகை..!

ஆனால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது என்றும் பாஜக அரசின் வெளியுறவுத்துறை தமிழக மீனவர் பிரச்சனையில் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வருகிறது எனவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக இலங்கை கடற்படை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து உள்ளார்.

இதையும் படிங்க: பிரேமலதாவின் சிறப்பான முடிவு... வலுவான கூட்டணி... செல்வப் பெருந்தகை வரவேற்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share