முருக பக்தர்கள் மாநாட்டில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட நிகிதா... உண்மையை அம்பலப்படுத்திய செல்வப்பெருந்தகை...!
நேர்மையான முறையில் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் செல்வ பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். திருப்புவனம் அஜித்குமார் உடைய பெற்றோர்களையும் சகோதரியையும் பார்த்து காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக ஆறுதல் சொல்வதற்கு சென்று கொண்டிருக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்றத்தாழ்வு இருப்பதை வைத்து தான் இப்படிப்பட்ட சம்பவம் நடக்கிறது. இனிவரும் காலங்களில் இருக்கக் கூடாது நிகிதா என்பவர் யார் அவர் பின்புலம் என்ன? அவர் எந்த கட்சியை சார்ந்தவர் இதையெல்லாம் ஆய்வு செய்து புகாரை எடுத்து இருக்க வேண்டும்.
மதுரை முருகன் மாநாட்டையே நிகிதா தான் முன் நின்று நடத்தியதாக செய்தி வருகிறது, புகைப்படங்கள் வருகிறது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். பின்னணி இருக்கிறதா எதற்காக அந்த ஆலயத்திற்கு சென்றார், எதற்காக அவருடைய காரை பார்க் செய்வதற்கு ஒரு அப்பாவியிடம் சாவியை கொடுத்தார்கள். கொடுத்துவிட்டு என்னுடைய நகையை காணவில்லை என எதற்காக புகார் செய்தார்கள் என நிறைய கேள்விகள் உள்ளது. அவற்றின் பின்புலம் என்ன என்பதை ஆராய வேண்டும். அவருக்கு கார் ஓட்ட தெரியாது, சாதாரண காவலாளி அவருக்கு எதற்கு அந்த பெண் இந்த வேலையை கொடுக்க வேண்டும். உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது எப்படி இருந்தாலும், அஜித் என்பவரை காவல் துறை தாக்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: மீனவர்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருக்கா..? பாஜகவை வறுத்தெடுத்த செல்வப்பெருந்தகை..!
இந்த விவகாரத்தில் முதல்வர் கண்ணியத்தோடு நடந்து இருக்கிறார். தன்னுடைய காவல்துறை செய்திருக்கும் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக சிபிஐக்கு மாற்ற சொல்லி ஆணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. நேர்மையாக விசாரணை நடந்து உண்மை குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அஜித்துக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதால் வழக்கு சிபிஐ இடம் ஒப்படைக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். நடுநிலையாக முதல்வர் மக்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறார். மக்கள் பக்கம் அவர் இருக்கிறார் என்பதை தான் காட்டுகிறது.
முதல்வர் துணை முதல்வராக இருந்தபோது அவரது உதவியாளர் பெயரை வைத்து மோசடி நடந்தது குறித்த கேள்விக்கு: ஏமாற்றுவதற்காக எல்லா பேரையும் பயன்படுத்தியிருக்கிறார், காவல்துறை எப்படி இதை கண்டு கொள்ளவில்லை என்பது கேள்விதான் உண்மை வெளிவரும். எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அந்த குடும்பத்தை தேற்ற முடியாது, நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று இருந்திருக்கிறார். அவரின் மறைவு யாராலும் ஈடு செய்ய முடியாது.
அஜித் குமார் விவகாரத்தில் மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, மேலிடம் யார் நிகிதா மேலிடமா. அவர் பின்பு பிஜேபி, ஆர்எஸ்எஸ் எவ்வளவு இருக்கின்றது என்று பார்க்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் எப்போதும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதற்கான திமுக நிர்வாகிகள் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு,
எல்லா தொகுதிகளும் கூட நிக்கட்டும், தொகுதி குறித்த முடிவுகள் அதை முதல்வர் முடிவெடுப்பார் என்றார்.
இதையும் படிங்க: பாஜக ’ஷாக்’... திமுக ‘ராக்’.. ராமதாஸ் செல்வப்பெருந்தகை திடீர் சந்திப்பின் பின்னணி...!